Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

வாட்டிகன் சிட்டி ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைமையிடமாகவும் இருக்கிறது. இந்த உலகின் மிகச் சிறிய நாட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்Twitter
Published on

உலகின் அழகான நகரங்களுள் ஒன்று ரோம். இங்கு வாட்டிகன் என்ற ஒரு மிகச் சிறிய நாடு ஒன்று இருக்கிறது. எவ்வளவு சிறியது என்றால் இதனை சுற்றிப்பார்க்க ஒரு மணி நேரமே போதுமானது

அது என்ன அவ்வளவு சிறிய நாடா என்றால், 0.17 சதுர மைல்கள் தான் உள்ளது. பரப்பளவில் உலகில் மிகச் சிறிய நாடு இது.

வாட்டிகன் சிட்டி ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைமையிடமாகவும் இருக்கிறது.

இந்த உலகின் மிகச் சிறிய நாட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்

யுனெஸ்கோ பாரம்பரிய தலம்

வாட்டிகன் சிட்டியில் மியூசியம்கள் ஏராளமாக உள்ளன. இந்த நாடானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்று

தனி நாடு

ரோம் என்ற நாட்டுக்குள் அமைந்திருக்கும் வாட்டிகன் சிட்டி, முன்பே சொன்னது போல சுதந்திரமாக செயல்படும் ஒரு தனிச் சிறிய நாடு. முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ள இந்த நாடு நியூயார்க்கின் சென்டிரல் பார்க் பகுதியில் 8ல் ஒரு பங்கு தான் இருக்கிறது.

வாட்டிகன் நாடு தனக்கென்று சொந்தமாக ஸ்டாம்ப், பாஸ்போர்ட் மற்றும் லைசன்ஸுகள் வைத்திருக்கிறது. இங்கு சுமார் 1000 பேர் மட்டுமே வாழ்கின்றனர்.

Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Vatican City : 1 மணி நேரம் போதுமா ஒரு நாட்டையே சுற்றி பார்க்க? சூப்பர் Tourist Spot

போப் கெஸ்ட் ஹவுஸ்

போப்பின் அதிகாரமானது வாட்டிகன் எல்லைகளை கடந்தும் செல்கிறது. இவர் வசிக்கும் கோடைக்கால கெஸ்ட் ஹவுஸ், கேசில் கண்டோல்ஃபோ ரோமில் இருந்து 20 கிலோமீட்டர் வெளியில் அமைந்திருக்கிறது.

17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த வீடு. ரோமில் இருந்து இந்த கெஸ்ட் ஹவுஸை அடைய ஒரு ரயில் இருக்கிறது மேலும், கண்களை கவரும் பழங்காலத்து கலைப்பொருட்கள் இருக்கின்றன.

போப் தான் மன்னர்

ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைமையிடமான இங்கு தலைமை வகிக்கும் போப் ஆண்டவர் தான் அந்த வாட்டிகன் நாட்டின் மன்னரும் கூட.

இவரது இல்லத்தை அபோஸ்டாலிக் அரண்மனை என்று அழைக்கின்றனர்.

இங்கு போப்பின் அலுவலகங்கள், குடியிருப்புகள், மியூசியம்கள் இருக்கின்றன. இங்கு சுமார் 1400 அறைகள் உள்ளனவாம்

Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
16,000 அடியில் ATM, உயரமான மலைகள், முதல் நீதிபதி- பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நூலகம்

போப்பின் இந்த அரண்மனையில், ஒரு மிகப்பெரிய நூலகம் இருக்கிறது. இங்கு உலகின் மிகப் பிரபலமான, அரிய முக்கியமான புத்தங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

லத்தீன், கிரெக்கம், ஹீப்ரூ மொழிகளுடைய புத்தகங்களும் இங்கு இருக்கின்றன

அறிஞர்கள், மாணவர்களுக்கு இந்த நூலகத்துக்குள் அனுமதி இலவசம்.

இந்த நூலகமானது 1475ல் தொடங்கப்பட்டது. இங்கு சுமார் 1.1 மில்லியன் நூல்கள், வரலாற்று பிரதிகள் உள்ளன. ஒரு ஆண்டுக்கு குறைந்தது 6000 புதிய புத்தகங்கள் இந்த நூலகத்துக்கு வாங்கப்படுகின்றன.

அருங்காட்சியகம்

வாட்டிகன் சிட்டியில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு அருங்காட்சியகங்கள் மட்டுமே உள்ளன. இவற்றினை இரண்டாம் போப் ஜூலியஸ் நிறுவினார்.

இன்று இந்த அருங்காட்சியகங்கள் உலகின் தலைச்சிறந்த கலைப்பொருட்களின் இருப்பிடமாக திகழ்கின்றன. இவை உலகின் 5வது மிகப் பெரிய அருங்காட்சியகங்கள் ஆகும்.

இங்கு எகிப்திய மம்மிகள், ஓவியர்கள் பிகாசோ, வான் கோவின் ஓவியங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Eiffel Tower: கண்ணாடி தரை முதல் Roof Top உணவகம் வரை- உலக அதிசயம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

சிறைகள் இல்லை

வாட்டிகனில் சிறைகள் இல்லை. விசாரணைக்கு முன் கைதிகளை வைத்திருக்க சிறிய செல்கள் உள்ளன. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்கள் இத்தாலி சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதற்கான செலவுகளை வாட்டிகன் அரசாங்கம் தான் ஏற்கிறது

அதிக குற்றங்கள்

ஏறக்குறைய 1000 பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவது பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்

வைன் கேப்பிடல்

வாட்டிகன் நாட்டு மக்கள் அதிகமாக வைன் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். சராசரியாக வாட்டிகன் நாட்டு குடிமகன் ஒருவர் ஒரு ஆண்டுக்கு 74 லிட்டர் வைன் அருந்திகிறாராம். இது இத்தாலி பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட இரு மடங்கு அதிகம்.

இந்நாட்டு மக்கள் அதிகமாக கூட்டமாக கூடி உணவு அருந்துவதாலும், நாட்டின் ஒரே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தான் வைன் வரி இல்லாமல் கிடைப்பதாலும் தான் இங்கு அதிகமாக வைன் அருந்தப்படுகிறது எனக் கூறப்படுகிறது

யாரும் வாட்டிகன் குடிமகன் இல்லை

இங்கு மருத்துவமனைகள், பிரசவ அறைகள் இல்லாததால், யாருமே பிறப்பால் வாட்டிக்கன் நாட்டின் குடிமகனாக முடியாது. திருச்சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட குறிப்பிட்ட சேவைகளில் பணியாற்ற நியமனம் கிடைத்த பின்னர் தான் குடியுரிமை வழங்கப்படுகிறது

லத்தீன் மொழியில் ஏடிஎம்

வாட்டிகனில் அதிகாரப்பூர்வ மொழியாக இத்தாலிய மொழி பயன்படுத்தப்படுகிறது. அரசு சார்ந்த அனைத்து செயல்களுக்கும் இத்தாலியன் பயன்படுத்தப்பட்டாலும், வாடிகனில் உள்ள ஏடிஎம் களில் லத்தீன் மொழியும் பயன்படுத்தப்படுகிறது

Vatican City: இங்கு குடியுரிமை கிடையாதா? உலகின் மிகச் சிறிய நாடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com