நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், அதனை ரசிப்பதற்கும் முதலாவதாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
இப்போது, பெய்து வரும் மழைக்கு மத்தியில் எங்கே வீட்டை விட்டு வெளியே செல்வது என்று யோசிக்க வேண்டாம்.
நீங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே உலகைச் சுற்றி இருக்கும் ஸ்வாரசியமான இடங்களை உங்கள் கண் முன்னே நிறுத்துகிறது இந்த பதிவு.
சீனாவில் உள்ள ஹாங்சோ பகுதியில் அமைந்துள்ள சொகுசு ரியல் எஸ்டேட்டை அங்குள்ள மக்கள் 'லிட்டில் பாரிஸ்' என்று அழைக்கின்றனர்.
இந்த எஸ்டேட் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவரில் மூன்றில் ஒரு பங்கு என்றாலும் இது சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியல் கலைக்கு சான்றாக கருதப்படுகிறது.
இந்த குட்டி பாரிஸில் ஆர்க் டி ட்ரையம்பே, ஒரு சாம்ப்ஸ் எலிஸீஸ், ஜார்டின் டு லக்சம்பேர்க்கிலிருந்து ஒரு நீரூற்று, பிரெஞ்சு தலைநகரின் பவுல்வர்டுகள் மற்றும் நியோகிளாசிக்கல் கட்டிடக்கலை ஆகியவை உள்ளன.
ரஷ்யாவின் வடக்கு பகுதிக்கும் சீனாவின் தென் பகுதிக்கும் இடையே அமைந்துள்ள நாடு மங்கோலியா.
இந்த நாட்டில் மக்கள் தொகை அளவு மிகக்குறைவாக இருந்தாலும், பரப்பளவில் விரிந்து இருக்கும் ஒரு பகுதியாகும். அதுவும், மங்கோலியாவில் ஒரு சில பகுதிகளை கடந்து செல்லும் போது நீண்ட நாட்களுக்கு மனிதர்களின் முகத்தையே பார்ப்பது கூட அதிசயம் தான்.
அப்படி பீடபூமிகள், புல்வெளிகள் மற்றும் வறண்ட பாலைவனங்களைக் கொண்டுள்ள இந்த நாடு சுற்றிப் பார்ப்பதற்கான சிறந்த இடமாகும்.
ஸ்பெயினில் அமைந்துள்ள கிரனாடா 'குகைகளின் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சாக்ரோமாண்டே மற்றும் குவாடிக்ஸ் குகைகள் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இங்குள்ள 2000க்கும் மேற்பட்ட வீடுகள் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் செய்யப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் மதம் மற்றும் இனப் பிரச்னைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் இந்த இடங்களை உருவாக்கியதாக தெரிகிறது.
உலகளவில் இதய வடிவிலான தீவுகள் அநேகம் இருந்தாலும், குரோஷியாவில் உள்ள கேலெஸ்ன்ஜாக் தீவு இதில் சிறந்த தீவாக கருதப்படுகிறது.
மக்கள் எவரும் வசிக்காத இடமாக இருந்த இந்த தீவு தற்போது காதலர்கள் கொண்டாடும் இடமாக மாறி இருக்கிறது. இந்த தீவு விரைவில் திருமணங்கள் மற்றும் தேனிலவு கொண்டாடும் இடமாக மாற்றப்பட இருக்கிறதாம்.
ரஷ்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஒய்மியாகோன் என்னும் குளிர் பிரதேசம். இந்த இடத்தில் 70 டிகிரி செல்ஸியஸ் என்ற உறைய வைக்கும் வெப்பநிலை அளவு காணப்படுகிறது.
இதில், ஆல்கஹால் கூட உறைந்து விடுமாம். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் நெருங்கக் கூட முடியாத இந்த இடத்தில் சுமார் 500 சைபீரிய மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த இடம் இவ்வளவு குளிராக இருந்தாலும் அதையும் சுற்றிப்பார்ப்பதற்காக மக்கள் வருகை தருகின்றனர்.
அட்லாண்டிக் பகுதியைச் சேர்ந்த பஹாமாஸ் கடற்பரப்பிற்கு அடியில் மறைந்திருக்கும் 'ஓஷன் அட்லஸ்' உலகின் மிகப்பெரிய சிற்பம் ஆகும். இது சுமார் 60 டன் எடையும் 18 அடி உயரமும் கொண்டது.
நீருக்கடியில் சிற்பங்களை உருவாக்கும் கலைஞர் ஜேசன் டிகேயர்ஸ் டெய்லர் இந்த சிற்பத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை வசீகரித்து இழுக்கும் டென்மார்க் நாடு உலகின் தூய்மையான நாடாக பெயர் பெற்றுள்ளது. அதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின் (EPI) மூலம் உலகின் தூய்மையான நாடாக டென்மார்க் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் குப்பைகளை மாற்று சக்தியாக பயன்படுத்துவதால் மிகவும் தூய்மையான நாடாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மொழிகள் பேசப்படுகிறது. இப்படி மனிதர்கள் பேசும் வெவ்வேறு மொழிகளை கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கையில், துருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் பறவைகள் பேசும் மொழியை பேசுகிறார்களாம்.
இது கேட்பதற்கே ஆச்சரியமளிப்பதாக இருக்கிறதல்லவா? அதாவது துருக்கியில் உள்ள குஸ்கோய் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விசில் வகையிலான மொழியை பயன்படுத்துகின்றனர்.
அதாவது, ஒரு செய்தியை தெரிவிக்க மனித மொழியை பயன்படுத்துவதை விட, அதிக தூரம் செல்லக்கூடிய பறவைகளின் மொழியை இவர்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த கலாச்சராம் யுனெஸ்கோவின் (2017) கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க் உலகிலேயே அதிகம் படம்பிடிக்கப்பட்ட இடமாகும். இந்த இடம் முதன் முதலாக ரோமியோ ஜூலியட் (1908) என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது.
நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க், பூங்காவைச் சுற்றியுள்ள மன்ஹாட்டனின் பகுதியின் சத்தங்களுக்கு இடையில் அமைதியான ஒரு உணர்வைக் கொடுக்கிறது. இதில், நினைவுச்சின்னங்கள், சிற்பங்கள், பாலங்கள், பறவைகள் மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவைகளுடன் சிறந்த பொழுதுபோக்கு தளமாக விளங்குகிறது.
நம்மால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை நடந்து கடப்பது எவ்வளவு கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரே நாளில் நடந்து நம்மால் ஒரு நாட்டையே கடக்க முடியுமாம்.
அதாவது, வடக்கில் இருந்து தெற்கே 15 மைல்கள் மற்றும் கிழக்கில் இருந்து மேற்கே 2.5 மைல்கள் மட்டும் கொண்டுள்ள லிச்சென்ஸ்டைன் நாட்டை ஒரே நாளில் அதுவும் நடந்தே கடந்து விடலாம்.
லிச்சென்ஸ்டைன் நாடு ஆல்ப்ஸ் மலைகளின் நடுவே அமைந்திருப்பதால், பயணத்தில் போது சில செங்குத்தான சாய்வுகள் மட்டும் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust