10 கோடி பரிசா? லாட்டரியால் கோடீஸ்வரர்கள் ஆன துப்புரவு பணியாளர்கள் - எங்கே?

அந்த துப்புரவு பணியாளர்களிடம் லாட்டரி டிக்கெட் வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஒவ்வொருவரும் 250 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்க அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளனர். தங்களிடம் இருக்கும் பணத்தை ஷேர் செய்து அனைவரும் இணைந்து ஒரு டிக்கெட் வாங்கியுள்ளனர்.
11 Women Pooled Money To Buy ₹ 250 Lottery Ticket. They Won ₹ 10 Crore
11 Women Pooled Money To Buy ₹ 250 Lottery Ticket. They Won ₹ 10 CroreTwitter
Published on

கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் இணைந்து வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது, இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக பணிபுரிந்து வரும் 11 பேர், வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த விற்பனையாளர் ஒருவர், மழைகால லாட்டரி டிக்கெட் விற்று வந்துள்ளார்.

அந்த துப்புரவு பணியாளர்களிடம் லாட்டரி டிக்கெட் வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஒவ்வொருவரும் 250 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்க அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளனர்.

தங்களிடம் இருக்கும் பணத்தை ஷேர் செய்து அனைவரும் இணைந்து ஒரு டிக்கெட் வாங்கியுள்ளனர்.

அதன்படி, 9 பேர் தலா 25 ரூபாயும், மீதமுள்ள பணத்தை இரண்டு பேரும் கொடுத்து ஒரு டிக்கெட்டை வாங்கியுள்ளனர்.

11 Women Pooled Money To Buy ₹ 250 Lottery Ticket. They Won ₹ 10 Crore
கேரளா: "பண உதவி கேட்டு நச்சரிக்காதீங்க..." - 25 கோடி லாட்டரி வென்றவர் புலம்பல்

இந்த நிலையில், மழைகால பம்பர் லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது.

பின்னர், அதனை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது.

பம்பர் பரிசான 10 கோடி ரூபாய் தங்களுக்கு விழுந்ததை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

11 Women Pooled Money To Buy ₹ 250 Lottery Ticket. They Won ₹ 10 Crore
கேரளா: இந்தியாவின் அழகான கிராமத்தில் மக்கள் அவதி - பாலக்காட்டு சொர்க்கம் பரிதவிப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com