ஷூ லேஸ் காதணிகளை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம் - என்ன விலை தெரியுமா?

Balenciaga எனும் முன்னணி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஷூலேஸ் காதணிகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Shoelace Earrings
Shoelace EarringsTwitter
Published on

பெரும்பாலானோர் ஃபேஷன் விரும்பிகளாக இருப்பார்கள், அதிலும் சிலர் வாழ்க்கையையே பேஷன் நோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதற்காக சுற்றியுள்ள அனைத்தையும் அவ்வாறு மாற்ற முன்வருவார்கள். இவர்களின் மன நிலையை புரிந்துகொள்ளும் பல ஃபேஷன் நிறுவனங்கள் அவர்களுக்காகவே பிரத்யேகமாக பல பொருட்களை தயாரித்து வருகிறது.

ஃபேஷனுக்காக உங்கள் வழக்கமான ஷூலேஸ்களை காதணிகளாக அணிவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஷன் பிராண்டான Balenciaga எனும் முன்னணி நிறுவனம் ஷூலேஸ் காதணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Shoelace Earrings
ஏணி, தகரம், பலகை - இணையத்தை கலக்கும் ஃபேஷன் ஷோ Spoof

இந்த வகையான காதணிகள் இணையத்தில் மூலம் மக்களை ஈர்த்துள்ளன. ஃபேஷன் பிராண்ட் ஷூலேஸ் காதணிகளின் விலை 250 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 20,000 ரூபாய் என்று கூறப்படுகிறது.

Highsnobiety என்ற குளோபல் பேஷன் மீடியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய வகை காதணிகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இதனை கண்ட இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஷனுக்காக Balenciaga வித்தியாசமான, விலை உயர்ந்த பொருட்களை தயாரிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 1790 டாலர்களுக்கு Trash Pouch எனப்படும் குப்பை பை ஒன்றை இந்த நிறுவனம் உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Shoelace Earrings
நியூயார்க் ஃபேஷன் ஷோவில் 10 வயது திருநங்கை சிறுமி சாதனை | புகைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com