அயோத்தியில் ராமர் கோவில் தவிர பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

ராமர் கோவில் தவிர அயோத்தியில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ​​வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா, சரயு நதியின் மலைப்பாதைகள், பழங்காலத் தெருக்கள் என பல இடங்கள் உள்ளன, நகரத்தில் பல கலை நயமிக்க இடங்களையும் பார்க்கலாம்.
4 Places to visit in Ayodhya
4 Places to visit in AyodhyaTwitter
Published on

அயோத்தி என்றதும் உடனே நம் நினைவிற்கு வருவது ராமர் கோவில் தான். அந்த அளவிற்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து செய்திகள் வந்தன.

சமீபத்தில்தான் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.

ராமர் கோவில் தவிர அயோத்தியில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ​​வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா, சரயு நதியின் மலைப்பாதைகள், பழங்காலத் தெருக்கள் என பல இடங்கள் உள்ளன, நகரத்தில் பல கலை நயமிக்க இடங்களையும் பார்க்கலாம்.

அயோத்தியின் வீதிகள், பழமை மாறாமல் அப்படியே இருக்கும். நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பழமையான வீடுகள் எல்லாமே நம்மை வியக்க வைக்கும். ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்டிருக்கும் பழங்கால குடியிருப்புகளை நீங்கள் இன்னும் காணலாம்.

இங்குள்ள துளசிதாஸ் பவன் அருங்காட்சியகம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடமாகும். அயோத்தி ஆராய்ச்சி மையத்தில் தென்னிந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் இந்தோனேசிய தீவுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமாயணம் தொடர்பான பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

கனக் பவன் அயோத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். கனக் என்ற சொல்லுக்கு 'தங்கம்' என்று பொருள்.

கனக் பவன் என்ற ஆடம்பரமான அரண்மனை தசரதனின் 3 வது மனைவியான கைகேயி ராணிக்காக கட்டப்பட்டது. அரண்மனையின் முன் பகுதியில் சீதைக்கு ஒரு கோவில் உள்ளது.

4 Places to visit in Ayodhya
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!

ராமரின் நீச்சல் குளமாக கருதப்படும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் ராம் கி பைடியும் ஒன்று. அயோத்திக்கு சென்று இந்த இடத்தை நிச்சயம் பார்வையிடலாம்.

4 Places to visit in Ayodhya
பூடான் to பிரான்ஸ்: இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com