ஹரியானா: பாரம்பரிய அங்கீகாரம் பெறும் 4000 மரங்கள் -  Heritage Status எப்படி வழங்கப்படும்?
ஹரியானா: பாரம்பரிய அங்கீகாரம் பெறும் 4000 மரங்கள் - Heritage Status எப்படி வழங்கப்படும்?canva

ஹரியானா: பாரம்பரிய அங்கீகாரம் பெறும் 4000 மரங்கள் - Heritage Status எப்படி வழங்கப்படும்?

கதம்பம், வேம்பு, புளி, வன்னி, பீபல் உள்ளிட்ட மரங்கள் ஹரியானாவில் இந்த அங்கீகாரத்தை பெறவுள்ளன. இவற்றில் பெரும்பாலும் கிராமங்கள், கோவில்கள், ஆரவல்லி மலையடிவாரத்தில் அமைந்திருக்கின்றனவாம்.
Published on

ஹரியானா மாவட்டத்தில் மொத்தம் 4000 மரங்களுக்கு பாரம்பரிய அங்கீகாரத்தை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 701 மரங்கள் தெற்கு ஹரியானாவில் உள்ளதாக வனத்துறை ஆய்வுகள் சொல்கின்றன.

மரங்களுக்கு கொடுக்கப்படும் பாரம்பரிய அங்கீகாரம் என்பது என்ன?

ஒரு பெரிய, அரிய முக்கியத்துவம் உள்ள, நிகரற்றதாக கருதப்படும் மரம் தான் பாரம்பரிய மரமாக கருதப்படுகிறது.

மரங்கள் வயது, அது எந்த அளவுக்கு அரியதாக இருக்கிறது. இவற்றுடன் சேர்த்து, அழகியல், தாவரவியல், சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று மதிப்பு ஆகியவையும் கணக்கிடப்படுகின்றன.

கதம்பம், வேம்பு, புளி, வன்னி, பீபல் உள்ளிட்ட மரங்கள் ஹரியானாவில் இந்த அங்கீகாரத்தை பெறவுள்ளன. இவற்றில் பெரும்பாலும் கிராமங்கள், கோவில்கள், ஆரவல்லி மலையடிவாரத்தில் அமைந்திருக்கின்றனவாம்.

இந்த பாரம்பரிய அங்கீகாரம் பெறும் மரங்களின் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.

இந்த மரங்கள் அரசு நிலத்தில் இருந்தாலும் சரி, தனியார் நிலத்தில் இருந்தாலும் இந்த ஓய்வூதியம் ஆனது வழங்கப்படும்.

ஹரியானா: பாரம்பரிய அங்கீகாரம் பெறும் 4000 மரங்கள் -  Heritage Status எப்படி வழங்கப்படும்?
இந்த வேப்ப மரத்தின் இலைகள் இனிக்குமாம்! எங்கே இருக்கிறது இந்த அதிசய மரம்?

மரங்களுக்கு ஏன் பாரம்பரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது?

வளர்ந்த செழிப்பான மரங்களை காத்தல் அவசியம் என்கிறார் ஹரியானாவின் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் வினோத் குமார்.

காரணம், மரக்கன்றுகள் நடுவதால், அவை நிச்சயமாக வளர்ந்துவிடும் என்று உறுதி கூற முடியாது என்கிறார். இந்த மரக்கன்றுகளின் உயிர் பிழைப்பு விகிதம் குறைவே.

ஆகையால் பழைய மரங்களை வெட்டுவது நமது சுற்றுச் சூழலை பாதிக்கிறது. இதனால், பழைய, வளர்ந்த செழிப்பான மரங்களை காக்க மக்களை ஊக்குவிக்க இந்த 2500 ரூபாய் ஓய்வூதியம் உதவும் எனவும் வினோத் குமார் கூறுகிறார்.

ஹெரிடேஜ் மர விதிகள், 2021-ன் படி, யாரேனும் ஒரு நபரோ அல்லது அமைப்போ 'பாரம்பரிய' மரத்தை வெட்டினால், அல்லது சேதத்தை ஏற்படுத்தினால், அவர்களுக்கு ரூ. 500 வரை அபராதம் அல்லது ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஹரியானா: பாரம்பரிய அங்கீகாரம் பெறும் 4000 மரங்கள் -  Heritage Status எப்படி வழங்கப்படும்?
இந்த மரத்தின் வயது 9 ஆயிரம் ஆண்டுகளா? உலகின் பழமையான மரங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com