அமைதியை தேடி பயணமா? இந்த மழைக் காலத்தில் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள்!

இந்தியாவில் நம்மை பிரமிக்க வைக்க பல ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் இயற்கையில் உருவானவை. இந்தியாவில் ஐகானிக்காக இருக்கும் ஏரிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தால் ஏரி, ஸ்ரீநகர்
தால் ஏரி, ஸ்ரீநகர்Twitter
Published on

மலைகளுக்கான பயணங்களும், காடுகளின் சிலிர்ப்புகளும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துவிடுகின்றன. அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பித்து இனிமையான அமைதியான இடங்களுக்கு செல்ல நம்மில் பலர் எண்ணுவோம்.

அப்படி இந்தியாவில் நம்மை பிரமிக்க வைக்க பல ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் இயற்கையில் உருவானவை. இந்தியாவில் ஐகானிக்காக இருக்கும் ஏரிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தால் ஏரி, ஸ்ரீநகர்

இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது இந்த ஏரி. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் இந்த ஏரி ஸ்ரீநகரின் வைரக்கல் என அழைக்கப்படுகிறது.

இந்த ஏரி மீன்பிடித்தல் போன்ற வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஏரியின் கரையோரம் முகலாய கால தோட்டங்கள் மற்றும் பூங்காக்களால் சூழப்பட்டுள்ளது. இதன் இயற்கை அழகு நிச்சயம் உங்கள் கண்களை திகைக்க வைக்கும்.

நைனி ஏரி

உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று இந்த நைனி ஏரி. இது மனிதக் கண்ணைப் போன்ற வளைவு வடிவத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது. குடும்பத்துடன் படகு சவாரி செய்ய சிறந்த இடமாக இது இருக்கும்.

சேலா ஏரி

இயற்கை அழகு மற்றும் அமைதியான சுற்றுப்புறம் காரணமாக இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரி, பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இயற்கை பொக்கிஷத்தை காண விரும்பும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடமாகும்.

பிச்சோலா ஏரி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரியாக இந்த பிச்சோலா ஏரி பார்க்கப்படுகிறது. 13-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நன்னீர் ஏரியாகவும் இது அறியப்படுகிறது.

தால் ஏரி, ஸ்ரீநகர்
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்!

குருதோங்மார் ஏரி

சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, பௌத்த மதத்தினரின் புனித ஏரியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு ஏரியாகவும் இது அறியப்படுகிறது.

தால் ஏரி, ஸ்ரீநகர்
பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com