50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?

இந்த விநோத சம்பவம் காவல்நிலையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இடத்தை ஆய்வு செய்ததுடன் நிலத்தின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் வாசிகளை விசாரித்திருக்கின்றனர்.
50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?
50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?Twitter

கடந்த ஆண்டு பீகாரில் 60 அடி நீளமான இரும்பு காணாமல் போனதைத் தொடர்ந்து சமீபத்தில் 50 அடி உயர செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் உஜ்ஜைனில் இருந்த அந்த டவரின் எடை 10டன் எனக் கூறப்படுகிறது.

நவம்பர் 29ம் தேதி காவல்துறையில் புகார் அளித்த தொழில்நுட்ப வல்லுநர் கடந்த மார்ச் 31ம் தேதியே டவர் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

டவர் மட்டுமின்றி, அங்கிருந்த தங்குமிடம், மின் பொருத்துதல் மற்றும் இதர உபகரணங்கள் என 8.5 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போய்விட்டன என்று தொழில்நுட்ப வல்லுநர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த விநோத சம்பவம் காவல்நிலையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இடத்தை ஆய்வு செய்ததுடன் நிலத்தின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் வாசிகளை விசாரித்திருக்கின்றனர்.

50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?
திருடர்கள் சொன்ன வைத்தியத்தத்தால் குறைந்த தொற்று நோய் !

தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஷ் குமார் யாதவ், உபித் உல்லாஹ் என்பவரின் நிலத்தில் கடந்த ஜனவரி மாதம் தனது நிறுவனம் நிறுவிய செல்போன் டவர் காணவில்லை எனக் கூறியுள்ளார்.

டவரை ஆய்வு செய்வதற்காக மார்ச் 31ம் தேதி பார்க்க சென்ற ராஜேஷ் குமார், அங்கு டவரும், தங்குமிடமும் பிற சாதனங்களும் தடயம் இல்லாமல் காணாமல் போனதைக் கண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தாமதமாக புகார் கொடுத்தது ஏன்? திருடு போனது நில உடைமையாளருக்கு தெரியாமல் இருந்தது எப்படி? என பல கேள்விகள் எழுகின்றன. மேற்கண்ட விவரங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?
பீகார்: 60 அடி பாலத்தைத் திருடிய பலே திருடர்கள் - ஓர் ஆச்சர்ய திருட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com