கார்பெண்டர் டு கார் வடிவமைப்பாளர் - பெட்ரோல் செலவில்லாத காரை உருவாக்கிய 65 வயது முதியவர்

அதிகரித்து வரும் பெட்ரோல் விலை அவரை அதிகமாக யோசிக்க வைத்தது. சாமனிய மக்களால் பைக் கூட ஓட்ட முடியாத நிலை இருப்பதை உணர்ந்தவர் இதற்காக எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுர்த்தார்.
கார்பெண்டர் டு கார் வடிவமைப்பாளர் - பெட்ரோல் செலவில்லாத காரை உருவாக்கிய 65 வயது முதியவர்
கார்பெண்டர் டு கார் வடிவமைப்பாளர் - பெட்ரோல் செலவில்லாத காரை உருவாக்கிய 65 வயது முதியவர்Twitter
Published on

பெட்ரோல் விலை கடந்த சில ஆண்டுகளாக நம் சம்பளத்தில் பாதியை கேட்கும் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஷாக் ஆகியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த பொருளைத் தான்.

மேற்கு வங்கம்  மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் செராஃபத் அலி தான் இந்த புரட்சிகரமான வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். அந்த வாகனத்தின் மதிப்பு வெறும் 70,000 மட்டுமே!

கார்பெண்டரான இவருக்கு பைக்குகள் மீதும் எஞ்சின்கள் மீதும் ஆர்வம் அதிகம். அலியை அதிகரித்து வரும் பெட்ரோல் விலை அதிகமாக யோசிக்க வைத்தது. சாமனிய மக்களால் பைக் கூட ஓட்ட முடியாத நிலை இருப்பதை உணர்ந்தவர் இதற்காக எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுர்த்தார். 

ஆனால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. “நான் ஒரு கார்பெண்டர். நான் வாகனம் ஓட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பெட்ரோல் விலையால் பைக்கை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே யோசிக்க வேண்டியதாக உள்ளது.” என தனது தேவையையும் அவரது கண்டுபிடிப்புக்கான அவசியத்தையும் கூறினார்.

பெட்ரோல் செலவு இல்லாத ஒரு வாகனத்தை உருவாக்க முயன்று பல ஆண்டுகளாக எனது வீட்டில் இருந்த பொருட்களைப் பயன்படுத்த முடிவெடுத்தேன். தேவைப்படும் பொருட்கள் உள்ளூரில் இல்லை என்றால் பஞ்சாபில் இருந்து வரவைத்தேன்” என வாகனத்தை உருவாக்கிய அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார் அலி.

பல மணி நேரம் வீட்டில் உள்ள கராஜில் பணியாற்றி 4 பேர் உட்காரக் கூடிய மின்சார வாகனத்தை  உருவாக்கினார் அலி.  

கார்பெண்டர் டு கார் வடிவமைப்பாளர் - பெட்ரோல் செலவில்லாத காரை உருவாக்கிய 65 வயது முதியவர்
எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?

அந்த கார் பச்சை நிறத்தில் இருந்தது, மிகவும் நேர்த்தியாக நவீனமானதாக மணிக்கு 30 கிலோமீட்டர் வரை வேகமான எஞ்சினுடன் இருந்தது. அதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் போகலாம்.

அலியின் இந்த கண்டுபிடிப்பு மொத்தமாக நாம் பயணம் செய்வதை மாற்றக் கூடியது. “குறைந்த வருமானம் ஈட்டக் கூடியவர்கள், குறிப்பாக கிராமத்து மக்கள் பெட்ரோல் விலையில் இருந்து தப்பிக்க இந்த வாகனத்தை பயன்படுத்தலாம்” என அலி கூறியுள்ளார். 

அலி அவர் வடிவமைத்த காரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் காட்டியுள்ளார். அந்த கார் குறித்த செய்தி தீயாக பரவிவிட்டது. சிலர் அதனை வாங்கிக்கொள்ளவும் முன்வந்துள்ளனர்.

கார்பெண்டர் டு கார் வடிவமைப்பாளர் - பெட்ரோல் செலவில்லாத காரை உருவாக்கிய 65 வயது முதியவர்
இந்திய லைசென்ஸ் வைத்திருந்தாலே இந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம் - அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com