ஊர் சுற்றவோ அல்லது பணி நிமித்தமாகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போது நாம் ரயில் அல்லது விமானத்தை பயன்படுத்தினால் நம்மால் முழுவதுமாக அந்த நாட்டின் அழகைச் சுற்றிப் பார்க்க முடியாமல் போகலாம்.
அதுவே நம் சொந்த வாகனத்திலேயே ஊர் சுற்றினோம் என்றால் எந்த இடத்துக்கும் செல்ல வசதியாக இருக்கும். அத்துடன் செல்லும் நாட்டையும் நன்றாக பார்வையிட முடியும்.
ஆனால் அதற்காக ஓட்டுநர் உரிமம் எல்லாம் வாங்க வேண்டுமென்றால் அதிக செயல்முறைகள் இருக்கும் என நினைத்திருக்கலாம். ஆனால் இந்த பட்டியலில் உள்ள நாடுகள் இந்திய லைசென்ஸ் வைத்திருந்தாலே நம்மை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றன.
ஜெர்மனியில் நாம் 6 மாதம் வரை இந்திய லைசென்ஸ் கொண்டு வாகனம் ஓட்டலாம். கண்டிப்பாக நம் லைசென்ஸின் ஆங்கில அல்லது ஜெர்மன் மொழி நகலை வைத்திருக்க வேண்டும்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய மூன்று நாட்டிலும் ஒரு ஆண்டு வரை இந்திய லைசென்ஸ் கொண்டு வாகனம் ஓட்டலாம்.
ஆஸ்திரேலியாவில் 3 மாதம் வரை இந்தியாவின் லைசென்ஸ் கொண்டுய் வாகனம் இயக்கலாம். லைசென்ஸ் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதே ஒரே ஒரு கண்டீஷன்.
மிகவும் அழகான சாலைகளை கொண்டுள்ள நாடான நியூசிலாந்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை 1 ஆண்டு வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கிறது.
ஹனிமூன் ஸ்பெஷலான சுவிட்சர்லாந்திலும் நமது சொந்த நாட்டு லைசென்ஸ் வைத்து ஒரு ஆண்டு வரை வாகனம் இயக்க முடியும். அங்கு கார்களை வாடகைக்குப் பெற்றும் ஊர் சுற்றிப் பார்க்கலாம்.
சௌத் ஆப்பிரிக்காவில் இந்திய லைசென்ஸ் வைத்திருந்தால் ஒரு ஆண்டு வாகனம் இயக்கலாம். லைசென்ஸில் நம்முடைய புகைப்படம், கையெழுத்து இருப்பது அவசியம். ஆங்கில நகலும் வேண்டும்.
ஆங்கிலம், ஸ்வீடிஷ், ஜெர்மன், பிரஞ்சு அல்லது நார்வேஜியன் மொழிகளில் லைசென்ஸ் இருக்கும் பட்சத்தில் ஸ்வீடனில் வாகனம் ஓட்ட முடியும்.
இந்திய லைசென்ஸ் கொண்டு ஒரு ஆண்டு வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறோம்.
இங்கு இந்திய லைசென்ஸ் கொண்டு ஒரு ஆண்டு வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறோம்.
ஒரு முறை மலேசிய தூதரகத்தில் அனுமதி பெற்றோம் என்றால் அங்கு நம் லைசென்ஸ் வைத்தே வாகனம் ஓட்டலாம்.
அமெரிக்காவில் இந்திய லைசென்ஸ் ஒரு ஆண்டு வரை செல்லுபடியாகும்.
பிரான்ஸில் சுற்றுலாப்பயணிகள் சொந்த நாட்டு லைசென்ஸ்லில் ஒரு ஆண்டு வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இந்திய லைசென்ஸில் பயணிக்க முடியும்.
பூடானிலும் இந்திய லைசென்ஸை வைத்தே வாகனம் ஓட்ட முடியும்.
ஃபின்லாந்தில் நமது லைசென்ஸ் செல்லும் என்றாலும் கட்டாயமாக ஹெல்த் இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே ஓட்ட முடியும்.
இங்கு ஒரு நாள் மட்டுமே இந்திய லைசென்ஸை பயன்படுத்த முடியும். உண்மையில் இந்த தீவைச் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதும்.
இத்தாலியில் இந்திய லைசென்ஸை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். ஆனால் லைசென்ஸ் சர்வதேச அனுமதிப் பெற்றிருப்பது அவசியம்.
வடதுருவ ஒளியைக் கொண்டிருக்கும் இங்கு மூன்று மாதம் இந்திய லைசென்ஸை பயன்படுத்தலாம்.
இந்திய லைசென்ஸ் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தால் ஐஸ்லாந்திலும் பயன்படுத்தலாம்.
கனடாவில் 60 நாட்கள் இந்திய லைசென்ஸை பயன்படுத்தி வாகனம் ஓட்ட முடியும். வலது பக்கத்தில் ஓட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust