எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?

2018ம் ஆண்டில் ரிவர்ஸில் கார் ஓட்டும் இவரது பயணம் தொடங்கியது. வட இந்தியா முழுவதுமே காரை ரிவர்ஸில் ஓட்டிக்கொண்டு கடந்தார். முதற்கட்டமாக 11 மாநிலங்கள் வழியாக 6,000 கிலோமீட்டர் பயணம் செய்தார்.
எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?
எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?Twitter
Published on

பின்பக்கமாக கார் ஓட்ட அனைவருக்கும் தெரியும். தெரிந்தால் தான் ஓட்டுவர் உரிமமே பெற முடியும்.

ஆனால் யாருமே அதில் கெட்டிக்காரர்களாக இருக்க மாட்டோம். சாதரணமாக பார்கிங் செய்யக் கூட நமக்கு 1 நிமிடம் தேவைப்படும்.

ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த சந்தோஷ் ராஜெஷிர்கே என்ற நபர் மிக நீண்ட தூரத்திற்க்கு ரிவர்ஸில் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

2018ம் ஆண்டில் ரிவர்ஸில் கார் ஓட்டும் இவரது பயணம் தொடங்கியது. வட இந்தியா முழுவதுமே காரை ரிவர்ஸில் ஓட்டிக்கொண்டு கடந்தார்.

கிட்டத்தட்ட 11 மாநிலங்கள் வழியாக 6,000 கிலோமீட்டர்கள் கடந்துள்ளார்.

பல முக்கிய இடங்களைக் கடந்து இவரது பயணம் அமைந்திருந்தது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் வாகா எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார்.

வடந்தியாவைச் சுற்றியப் பின்னர் வடகிழக்கு இந்தியாவின் சாலைகளிலும் ரிவர்சில் ஒரு ரவுண்ட் வந்தார் சந்தோஷ்.

சராசரியாக 45 கிலோமீட்டர் வேகத்தில் ரிவர்ஸில் பயணிக்கிறார் சந்தோஷ். இதற்காக அவரது ஷிஃப்ட் காரில் எந்த மாற்றத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை.

2017ம் ஆண்டு தனது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புனே முதல் ராய்கர் வரை 180 கிலோமீட்டர் ரிவர்ஸில் பயணம் செய்த சந்தோஷுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.

எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?
Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!

இதனால் அதிக தூரம் ரிவர்ஸில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டார்.

"இப்படி பயணம் செய்யும் போது மற்ற ஓட்டுநர்கள் மீது மோதாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறேன்" என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஹர்மன் ப்ரீத்
ஹர்மன் ப்ரீத்

ஹர்மன் ப்ரீத்

ரிவர்ஸ் விஷயத்தில் சந்தோஷுக்கு முன்னோடியாக திகழ்பவர் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மன் ப்ரீத் தேவி.

2003ம் ஆண்டு முதல் இவரது ஃபியட் வாகனத்தில் ரிவர்ஸில் செல்லத் தொடங்கியுள்ளார். எல்லா சாலைகளிலும் பின்பக்கமாகவே காரை ஓட்டுவார்.

எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?
'இந்த குடும்பத்தினர் 4 கால்களில் தான் நடக்கின்றனர்'- விஞ்ஞானிகள் கூறும் வினோத காரணம் என்ன?

ஹர்பிரீத்தின் கார் ஒருநாள் கியர் ஸ்டக் ஆகி யாருமே வராத சாலையில் சிக்கிக்கொண்டது. அப்போது ரிவர்ஸில் ஓட்டியே வீடு வந்து சேர்ந்தவர் அப்படி பின்பக்கமாக ஓட்டுவதை மிகவும் விரும்பத்தொடங்கினார்.

ரிவர்ஸில் ஓட்டுவதை மிகவும் விரும்பியவர், அதற்காக தனது காரில் 4 ரிவர்ஸ் கியரும் 1 ஃப்ரண்ட் கியரும் இருக்கும்படி வடிவமைத்துக்கொண்டார்.

இவரது கார் 80 கி.மீ வேகத்தில் கூட ரிவர்ஸில் சென்றது. உடன் பயணிப்பவர்களை எச்சரிக்க சைரன் ஒலியையும் பொருத்திக்கொண்டார்.

ஹெட் லைட் உள்ளிட்ட வசதிகளையும் செய்துகொண்டவர். மாநில அரசிடம் சிறப்பு அனுமதிகளைப் பெற்று வாகனம் ஓட்டினார்.

2005ம் ஆண்டும் பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் வரை ரிவர்ஸில் கார் ஓட்டி இரண்டு நாடுகளுக்கும் இடையில் அமைதி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

எப்போதும் ரிவர்ஸிலேயே கார் ஓட்டும் நபர் - ஏன்?
Instagram-ல் மெஸ்ஸி வீழ்த்திய முட்டை - ஒரு வினோத செய்தி !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com