Morning News Today : ஜூலை மாதத்துக்குள் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடக்கம் - வங்கிகள் சங்கம்

75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்NewsSense

ஜூலை மாதத்துக்குள் 75 டிஜிட்டல் வங்கிகள் செயல்படும்!

75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்கான செயல்திட்டத்தை உருவாக்க ரிசர்வ் வங்கி அதிகாரி அஜய்குமார் சவுத்ரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு உதவ இந்திய வங்கிகள் சங்கத்தின் உயர் அதிகாரி சுனில் மேத்தா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`

அனைத்து பொதுத்துறை வங்கிகளும், 10 தனியார் வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும் ஜூலை மாதத்துக்குள் டிஜிட்டல் வங்கி தொடங்குவதற்கான பணிகளை எற்கெனவே தொடங்கிவிட்டன.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்Twitter

தமிழக சட்டமன்ற நிகழ்வு:

தமிழக சட்டமன்றத்தில் நேற்று போக்குவரத்துத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர்" தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இனி, தமிழக அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுத் தேர்வுகள்
பொதுத் தேர்வுகள் Twitter

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்:

தமிழகம் முழுவதும் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மாணவர்களிள் அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி விமான நிலையம் : துபாயை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஓர் சாதனை

வணிகர்களின் குடும்ப நல இழப்பீடு ரூ.3 லட்சமாக உயர்வு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர் தினத்தை முன்னிட்டு 'தமிழக வணிகர் விடியல் மாநாடு' திருச்சியில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்துகொண்டார். விழாவில் பேசிய ஸ்டாலின்," வணிகர் நல வாரியம் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர் இறப்புக்கான குடும்ப நல இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்தில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்." என தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
IPL 2022 : இங்க அடிச்சா அங்க வலிக்கும் - SRH-ஐ போட்டுத் தள்ளிய வார்னர்
warner
warnerTwitter

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Facebook : பேஸ்புக் பயனர்கள் ஜாக்கிரதை! ஏமாற்று ஃபிஷிங் மோசடி உஷார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com