அசாம் ஹாஃப்லாங்: இந்தியாவில் இருக்கும் மினி சுவிட்சர்லாந்து பற்றி தெரியுமா?

வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்த மலைப் பிரதேசம் யாரும் அறிந்திடாத இடம். இதனாலேயே இதன் வனப்பும், சிறப்பும் இன்னும் மங்காமல் இருக்கிறது எனலாம்.
அசாம் ஹாஃப்லாங்: இதை கிழக்கின் சுவிட்சர்லாந்து என ஏன் அழைக்கின்றனர்
அசாம் ஹாஃப்லாங்: இதை கிழக்கின் சுவிட்சர்லாந்து என ஏன் அழைக்கின்றனர்ட்விட்டர்
Published on

இந்தியாவில், கிராமங்கள், நகரங்கள், மலைபிரதேசங்கள் ஏராளமாக உள்ளன.

இதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகு, மன அமைதியை தரும் சூழல் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

இதன் காரணமாகவே இந்தியாவில் சுற்றுலாவும் பிரபலமாக உள்ளது.

அப்படி, அசாமில் அமைந்திருக்கும் ஒரே ஒரு மலைப்பிரதேசம் பற்றி தான் இந்த பதிவில் தொகுத்துள்ளோம்

நகரமயமாக்கலின் இரைச்சலில் இருந்து தப்பித்து, சற்றே அமைதியான காற்றை சுவாசிக்க நீங்கள் விரும்பினால், அசாமின் ஹாஃப்லாங் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்த மலைப் பிரதேசம் யாரும் அறிந்திடாத இடம். இதனாலேயே இதன் வனப்பும், சிறப்பும் இன்னும் மங்காமல் இருக்கிறது எனலாம்.

ஹாஃப்லாங்கின் மெய்மறக்க வைக்கும் அழகும், வெப்பநிலையும், இதனை கிழக்கின் சுவிட்சர்லாந்து என்ற பெயரை பெற்று தந்திருக்கிறது.

அசாமின் கௌஹாத்தி நகரில் இருந்து சுமார் 345 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திமோ ஹசார் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஹாஃப்லாங். இதன் வெப்பநிலை மிதமானதாக இருக்கும். கோடை காலத்தில் கூட 30 டிகிரி செல்சியஸை தாண்டுவதில்லை. ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கு பருவமழைக் காலம் இருக்கிறது

அசாம் ஹாஃப்லாங்: இதை கிழக்கின் சுவிட்சர்லாந்து என ஏன் அழைக்கின்றனர்
பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடும் இந்திய கிராமம் - என்ன காரணம்?

மலைகளும், ஏரிகளும், அடர்ந்த காடுகளும் இந்த இடத்திற்கு இயற்கை அளித்த பரிசுகள். இங்குள்ள ஹாஃப்லாங் ஏரி, வாழ்வில் மிஸ் செய்துவிடக் கூடாத இடமாகும். இங்கு போட்டிங் செல்லலாம். சூரியன் உதிப்பதும், மறைவதும் இந்த ஏரியில் இருந்து காண கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

இங்கு ஜதிங்கா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமம் ஒரு அமானுஷ்யமான பின்னணியை கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் பல வகையான பறவைகள் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இங்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகள், என்ன காரணத்திற்காக மரணத்தை தேடிகொள்கிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

திமாசா, ஹ்மர், ஜெம் நாகா மற்றும் பிற பழங்குடி சமூகங்கள் இங்கு உள்ளன. இவை ஹஃப்லாங்கின் அடையாளங்களாகும். திருவிழாக்கள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் தனித்துவமான பழக்கவழக்கங்கள் இந்த பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு சாளரத்தை வழங்குகின்றன.

மேலும் இங்கு, டிரெக்கிங், பாராகிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் பாங்கில் உள்ளது, இது பிராந்தியத்தின் முக்கிய போக்குவரத்து மையமான குவஹாத்தியுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. குவஹாத்தியின் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும்.

அசாம் ஹாஃப்லாங்: இதை கிழக்கின் சுவிட்சர்லாந்து என ஏன் அழைக்கின்றனர்
Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com