Spiti Valley : செல்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்

ஒரு பேரனுபவத்திற்கு நீங்கள் தயார் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது Spiti valley-க்குதான். இயற்கையின் லயத்தில் நீங்கள் அங்கமாகலாம். குளுமை தாங்கிய அந்த நிலத்திற்கு நீங்கள் உங்களை ஒப்படைத்தால், அந்நிலம், அக்காற்று, அக்குளிர்...அந்த இயற்கையின் தீண்டல் ஒரு பேரனுபவத்தை உங்களுக்கு தரும்.
Spiti Valley
Spiti ValleyNewsSense
Published on


லடாக்கின் அதிகம் அறியப்படாத பகுதி ஸ்பிட்டி வேலி. இதுவொரு ஒரு குளிர்ந்த மலைப் பிரதேசம்.

இமாச்சலப் பிரதேசத்தில் இமயமலைகளின் மடியில் மறைக்கப்பட்டுள்ளது இந்நிலம். பனிச்சிறுத்தை, இமாலய ஓநாய் என இந்நிலம் சில வன பொக்கிஷங்களையும் தன்னிடத்தில் கொண்டிருக்கிறது.

இந்நிலத்தில், இப்பனியில் 1000 ஆண்டுகள் பழமையான சமூகங்களைப் பார்வையிடலாம்.

ஸ்பிட்டிக்கு பயணத்தை மேற்கொள்ளும் முன், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. ஸ்பிட்டியின் காலநிலை மற்றும் எப்போது செல்ல வேண்டும்?

ஸ்பிட்டி குளிரின் காரணமாக, பனி மழையின் காரணமாக வருடத்தில் சில மாதங்கள் நம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.

அடர்ந்த இமயமலைப் பனி, மலைப்பாதைகளுக்கு இடையூறாக இருப்பதால், சிம்லா வழியாக இங்கு செல்வது சிரமமாக இருக்கும்.

வசந்த காலத்தின் பிற்பகுதியில், மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் பிற்பகுதி வரை ஸ்பிட்டிக்கு வருகை தருவதற்கு ஏற்ற காலம். இந்த சமயத்தில் காலநிலை வெப்பமடைவதால், பனி படிப்படியாக மென்மையாகி, உருகி, பள்ளத்தாக்கிற்கான வழியை திறக்கிறது.

ஒரு வருடத்தில் வெறும் 250 நாட்கள் பகல் வெளிச்சம் இருக்கும். ஸ்பிட்டியில் குளிர்காலத்தை வார்த்தையால் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. -10 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது.

ஆனால் குளிர்காலத்தில்தான் அம்மக்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாடுவர். குளிர்கால மாதங்களில் ஸ்பிட்டியின் சுவாரஸ்யமான, வித்தியாசமான கலாச்சாரத்தை அறியலாம். இருப்பினும் இங்கு அசாதாரணமான பயணிகளால் மட்டுமே இந்த காலத்தில் செல்ல முடியும்.

Spiti Valley
Spiti ValleyPexels

2. ஸ்பிட்டியை எப்படி அடைவது?

ஸ்பிட்டிக்கு வழிகள், ரெண்டு. ஒன்று, சிம்லாவிலிருந்து கின்னவுர் பள்ளத்தாக்கு வழியாகவும், மற்றொன்று மணாலியிலிருந்தும்… முந்தைய வழி குறைந்தது 2 நாட்கள் ஆகும். கடைசியாகச் சொன்ன வழி, 12-14 மணிநேரம் ஆகும். இதெல்லாம் வானிலை பொறுத்துத்தான். பனி பொழிவுதான் நம் பயணத்தை பயண நேரத்தை தீர்மானிக்கும்.

3. எதை பேக் செய்ய வேண்டும்?

குளிர்ச்சியான மலைப் பாலைவனமாக ஸ்பிட்டி இருப்பதால் காலநிலை எப்போதும் குழப்பம்தான். ஆடைகளை லேயர்களாக பேக் செய்வதும், முழுக் கை டி-ஷர்ட்கள், சன் கேப்கள், சன் கிளாஸ்கள், வேறு சில சன் அஷ்யூரன்ஸ்களை வைத்திருப்பதும் நல்லது. சரியான காலணிகள் மிக மிக அவசியம்.

Spiti Valley
Spiti ValleyPexels

4. தனியாக அல்லது குழுவோடு செல்வது

தனியாகப் பயணம் செய்வது அல்லது கூட்டத்தோடு சேர்ந்து செல்வது என்பது தனிப்பட்ட விருப்பம். ஸ்பிட்டி நகரங்கள், எவ்வாறாயினும், தொலைதூரத்திலிருந்தாலும், இந்தியாவில் மிகவும் அன்பான, நட்பான நபர்களின் தாயகமாக இருக்கின்றன

அனுபவசாலிகள் யாரேனும் உங்களுக்குத் தேவை. தனியாக பயணிப்பது உங்களுக்குச் சிறந்த அனுபவங்களைத் தரும். மலை ஏறுதல், கலாச்சாரம் எனப் புதிய அனுபவங்களைப் பெறலாம். கலப்படம் இல்லாத இயற்கை பேரின்பத்தை அனுபவிக்கலாம்.

Spiti Valley
Spiti ValleyPexels

5. அனுமதி பெறுதல்

ஷிம்லா அல்லது மணாலியில் இருந்து ஸ்பிட்டிக்கு செல்பவர்களுக்கு ஸ்பிட்டிக்கு நுழைவதற்கு உரிமங்கள் எதுவும் தேவை இல்லை.

சிம்லாவில் இருந்து கின்னவுர் மூலம் ஸ்பிட்டியில் நுழைபவர்களுக்கு internal line Permit அவசியம். ஏனெனில் இது திபெத்திய புறநகர்ப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

6. போக்குவரத்துக்கான இணைப்பு / வசதி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெறப்பட்ட பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் ஸ்பிட்டியில் வேலை செய்கின்றன.

Spiti Valley
Spiti ValleySpiti Valley

7. பயணம் செல்ல உடல் தகுதி பற்றி…

ஸ்பிட்டியின் (3300-5000 மீட்டர்) உயரத்திற்கு, நீங்கள் முதல்முறையாகச் சென்றாலும், ஒவ்வொரு எக்ஸ்ப்ளோரருக்கும் குறிப்பிடத்தக்க அனுபவம் தேவை. சிம்லா வழியாக, கின்னாரில் பெரும்பாலான வழிகளை நிறுத்தி, அல்லது முந்தைய இரவை மணாலியில் ரோஹ்தாங் வழியாக செல்வதன் மூலம், படிப்படியாக உயரத்துக்குச் செல்லலாம். ஆனால், நுரையீரல், இதயம், சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பயணிக்கும் முன் தங்கள் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

Spiti Valley
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

8. ஸ்பிட்டியில் உள்ள ஹோம் ஸ்டே-கள்

ஸ்பிட்டியல் வாழும் சில குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் அவர்கள் மனதையும் பயணிகளுக்காகத் திறந்துவிட்டுள்ளனர். ஸ்பிடியன் கழிப்பறைகள் டிரை டாய்லெட்... இந்தியக் கழிப்பறையைப் பயன்படுத்துவது போல ஸ்குவாட் பொசிஷன்னில் இயற்கையாக மண் தரையில் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இந்தக் கழிவுகள் உரமாகின்றன.

9) பண விஷயங்கள்

பணம் தேவைப்பட்டால் தலைநகர் காஸாவில் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அங்கும் ஒன்றிரண்டு ஏடிஎம்களே உள்ளன. எனவே, மணாலி/ சிம்லாவில் இருந்து புறப்படும் முன்னரே போதுமான பணத்தை எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. ஸ்பிட்டியில் பணம் எடுக்க எந்த வசதிகளும் இல்லை.

Spiti Valley
ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com