"நீ சூரியனைப் போல் பிரகாசிக்க வேண்டும் என்றால்..." - அப்துல் கலாம் பொன்மொழிகள்!

அப்துல் கலாமின் சொற்கள் பல மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாக இன்றும் பதிந்திருக்கிறது.
அப்துல் கலாம்
அப்துல் கலாம்Twitter
Published on

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகனை நாயகனுமான அப்துல் கலாம், பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்திருக்கிறார்.

அப்துல் கலாமின் சொற்கள் பல மாணவர்களின் மனதில் பசுமரத்தாணியாக இன்றும் பதிந்திருக்கிறது. ஊக்கமளிக்கும் அவரது வார்த்தைகள் தனி மனிதர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் நாட்டுக்கான வார்த்தைகளாக இருந்திருக்கிறது.

ஒழுக்கமும், ஊக்கமும், விடா முயற்சியும் கடின உழைப்பும் ஒருவரின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவை என்பதை அப்துல்கலாமின் பொன்மொழிகள் நமக்கு உணர்த்தும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

அப்துல் கலாம் பொன்மொழிகள்!

வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.

அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்.

ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம்.

துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை!

கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை. நிச்சயம் எதுவும் இல்லை.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.

கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அது தான் கனவு.

வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.

அப்துல் கலாம்
"எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை..." - காந்தியின் பொன்மொழிகள்!

உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன.

நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

அப்துல் கலாம்
Karl Marx : சமத்துவக் கொள்கையின் பிதாமகனாக வாழ்ந்த கார்ல் மார்க்ஸின் பொன்மொழிகள்

நீங்கள் வெற்றி பெற்றவர்களின் சரித்திரங்களைப் படிக்காதீர்கள். அதிலிருந்து வெறும் தகவல்களைத் தான் பெற முடியும். தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள் அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும்.

கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுங்கள் கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கின்றனர்.

தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான்.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலி தான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான்.

உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.

அப்துல் கலாம்
பெரியார் 144வது பிறந்த நாள்: பத்து பொன்மொழிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com