ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் பேதை பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குநரகத்தின் மும்பை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது, போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் சொகுசுக் கப்பல் சோதனையின்போது மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சரிவர விசாரணை நடத்தாத முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துறை அமைச்சகத்திற்கு, மத்திய அரசு பரிந்துரை வழங்கியது. இந்நிலையில், சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வரிசேவை இயக்குநரகத்தின் சென்னை பிரிவிற்கு சமீர் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகம் நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கிக்கான உரிமையை முடக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, இறக்குமதி செய்யவோ முடியாது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காகத் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இரவு 8.30 மணிக்குச் சென்றார். இந்நிலையில், இன்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
கடந்த 26-ம் தேதி 12 வருடங்களுக்குப் பின்னர் மதுரையிலிருந்து தேனிக்கு அகலப்பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மதுரையிலிருந்து தேனி செல்லும் பேருந்துப் பயண நேரத்தைவிடக் குறைவாக உள்ளது. கட்டணமும் குறைவு. இந்நிலையில், மதுரை - தேனி சிறப்பு ரயில் நேரத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06701) மதுரையிலிருந்து காலை 8.30 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாகக் காலை 8.05 மணிக்குப் புறப்பட்டு காலை 9.35 மணிக்குத் தேனி சென்றடையும். மறுமார்க்கத்தில் தேனியிலிருந்து கிளம்பும் ரயில் (வ.எண்.06702) தேனியிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயிலானது வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust