காவல் நிலையத்தில் வைத்திருந்த 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாக கூறியுள்ளது உத்திர பிரதேச காவல் துறை. உத்திர பிரதேசத்தின் மதுரா நகரத்தில் இருக்கும் ஹைவே மற்றும் ஷேர்கர் ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை எலிகள் தின்றுவிட்டதாக உபி போலீஸ், மதுரா நீதிமன்றத்தில் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை சமர்ப்பிக்குமாறு நகர காவல்துறையிடம் மதுரா நீதிமன்றம் கேட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் 580 கிலோ போதை பொருட்களின் மதிப்பு 60 லட்சம் ரூபாய். எலிகள் இதனை சாப்பிட்டு நாசம் செய்ததாக மதுரா காவல்துறை கூறியுள்ளது.
எலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி போதை பொருட்களை எலிகள் சாப்பிட்டதற்கு ஆதாரம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த போலீசார், எலிகள் சிறியதாக இருப்பதாகவும், போலீஸாரை பார்த்து பயப்படுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், எலிகள் தான் போதை பொருட்களை சேதப்படுத்தியது என நிரூபிக்க ஆதாரம் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த போதை பொருட்களை போலீசார் வேறொருவரிடம் விற்றுவிட்டு, எலிகள் மீது பழி சுமத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020ல் ஷேர்கர் போலீசார் போதை பொருள் கடத்தியதற்காக மூவரை கைது செய்ததுடன், 386 கிலோ கஞ்சாவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், ஹைவே போலீசாரால், 191 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவற்றை தான் எலிகள் நாசம் செய்ததாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் 2021ல் கைப்பற்றப்பட்ட 1400 கார்டன் மதுபானங்களை இதே போல எலிகள் குடித்ததாக போலீசார் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust