குடிநீர் பம்ப்
குடிநீர் பம்ப்canva

குடிநீர் குழாயில் கள்ள சாராயம்; வெளிவந்த ரகசியம் - இணையத்தில் வீடியோ வைரல்

தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் நிரப்புவது போல குழாய் வழியாக சாராயம் சேகரித்து சட்டவிரோதமாக விற்றுவந்தது தெரியவந்துள்ளது.
Published on

மத்திய பிரதேசத்தில் குடிநீர் குழாயில் சாராயம் வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தின் குணா என்ற மாவட்டத்தில் இருக்கிறது பானுபுரா கிராமம். கடந்த திங்களன்று கிராமத்தில் போலீசார் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் 8 டிரம்களில் நிரப்பிவைக்கப்பட்டிருந்த சாராயத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குடிநீர் பம்ப்
நாடு முழுவதும் குழாய் மூலம் மதுபானம் சப்ளை? வைரலான புகைப்படம் - PIB விளக்கம் | Fact Check

இந்த 8 டிரம்களும் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் குடிநீர் குழாய், பார்ப்பதற்கு தண்ணீர் பிடிக்கும் பம்ப்பை போல அமைத்து வைத்திருக்கின்றனர்.

தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் நிரப்புவது போல குழாய் வழியாக சாராயம் சேகரித்து சட்டவிரோதமாக விற்றுவந்தது தெரியவந்துள்ளது.

5 லிட்டர் கேன்கள், அல்லது பிளாஸ்டிக் கவர்களில் சாராயத்தை விற்றுவந்துள்ளனர். கிராமத்தில் நடந்துவரும் சட்டவிரோதமான சாராய விற்பனைக் குறித்து ரகசிய தகவல் அறிந்த போலீஸார் சோதனைகள் மேற்கொண்டதாகவும், ஆனால், காவல் துறையினர் வருவதை அறிந்துகொண்ட குற்றவாளிகள் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக சாராயம் விற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

குடிநீர் பம்ப்
"கடைய எப்ப சார் திறப்பீங்க?" - வடிவேலு பாணியில் மதுபானம் திருடிய இருவர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com