"கடைய எப்ப சார் திறப்பீங்க?" - வடிவேலு பாணியில் மதுபானம் திருடிய இருவர் - எங்கே?

பிரபல, "ஹலோ...பிரபா வைன் ஷாப் ஓனரா?" நகைச்சுவை காட்சி பாணியில், திருட்டு சம்பவம் ஒன்று தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
vadivelu
vadivelutwitter
Published on

வடிவேலு பாணியில் இருவர் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை திருடிய சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள், நம் தினசரி வாழ்க்கையில் ஒன்றிப்போனவை. வடிவேலு ரெஃபெரன்ஸ் இல்லாமல், சிறு துரும்பும் அசையாது என்று சொன்னால் அது மிகையல்ல.

vadivelu
இலங்கை : வலிமை திரைப்பட பாணியில் போராட்ட களத்திற்கு வந்த Bikers - என்ன நடந்தது?

அந்த வகையில், பிரபல, "ஹலோ...பிரபா வைன் ஷாப் ஓனரா?" நகைச்சுவை காட்சி பாணியில், திருட்டு சம்பவம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

இரவு நேரங்களில் நடக்கும் திருட்டு சம்பவங்களில் மதுபானங்களை திருடுவது ஒன்றும் விதிவிலக்கல்ல. திருவள்ளூர் மாவட்டத்தில், கவுரப்பேட்டை என்ற ஊரை சேர்ந்த இரு இளைஞர்கள், டாஸ்மாக் கடை ஒன்றில் இரவில் ஓட்டைப்போட்டு மதுபானங்களை திருடி அருந்தியுள்ளனர். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

Theft(rep)
Theft(rep)Pexels

புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தண்டலச்சேரி என்ற இடத்தில் இவர்கள் இருப்பதை கண்டறிந்து, இருவரையும் கைது செய்தனர். பிடிபட்ட இருவரும் முன்பு போல தண்டலச்சேரியில் இருந்த டாஸ்மாக்கில் சுவற்றை துளையிட்டு உள்ளே உட்கார்ந்து கொண்டு குடித்துக்கொண்டிருந்தனர்.

சதி மற்றும் முனியன் என்ற அந்த இருவருக்கும், தினமும் இவ்வாறு டாஸ்மாக் கடைகளின் சுவற்றை உடைத்து குடித்துவிட்டு, அங்கிருந்து பணத்தை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

vadivelu
Triple H பாணியில் தண்ணீர் தெளித்து அயன் பண்ணும் நபர் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com