மதுபானம்
மதுபானம்Twitter

நாடு முழுவதும் குழாய் மூலம் மதுபானம் சப்ளை? வைரலான புகைப்படம் - PIB விளக்கம் | Fact Check

இந்திய அரசு குழாய் மூலம் மதுபானத்தை வழங்க உள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை குழப்பி வருகிறது.
Published on

குழாய் மூலமாக நுகர்வோருக்கு எளிதாக மது வழங்கப்படும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தாமிரபரணி படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் நடிகர் கஞ்சா கருப்பு நான் மட்டும் இந்த பகுதிக்கு ச.ம.உ ஆகினால், இந்த ஏரியால உள்ள எல்லா வீட்டு தண்ணீர் குழாயிலும் சாராயம் வர வைப்பேன் என்று கூறுவார். இந்த காட்சி நகைச்சுவையாக ஒரு திரைப்படத்திற்குப் பொருந்தலாம் நிஜ வாழ்வில் இதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

இந்த நிலையில் இந்திய அரசு குழாய் மூலம் மதுபானத்தை வழங்க உள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை குழப்பி வருகிறது.

மதுபானம்
திருவாரூர் பாஜக தலைவர் அண்ணாமலை திரண்ட கூட்டம்: புகைப்படம் போலியா? உண்மை என்ன ? Fact Check
PM Modi
PM Modi Twitter

வைரலான விளம்பரத்தில் ஒரு படிவம் உள்ளது, அதில் பிரதமர் நரேந்திர மோடி இலவச மதுபானம் வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த வரம்பற்ற மதுவை நீங்கள் பெற வேண்டும் என்றால் ரூ 11,000 PMO இன் இந்திய அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

மதுபானம்
கிரண் பேடி முதல் அமிதாப் பச்சன் வரை : பிரபலங்கள் பகிர்ந்த போலிச் செய்திகள் | Fact Check
மதுபானம்
சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘பீர்' - எங்கு தெரியுமா?

இந்த நிலையில் இந்த தகவல் பொய்யானது எனக் கூறியுள்ள PIB FACT CHECK ஒரு மீம் மூலமாக பதிலளித்துள்ளது.

அதில் மீமின் மேல் பாதியில் போலி அறிக்கையின் புகைப்படமும், கீழ் பாதியில் நகைச்சுவைப் படமான 'வெல்கம்' படத்தின் நடிகர் நானா படேகரின் புகைப்படத்தையும் வைத்து அமைதி நண்பர்களே, அதிகமாக நம்பிக்கைக்கொள்ளாதீர்கள் என பதிவிட்டுள்ளது.

இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாகப் கமன்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மதுபானம்
தாலி விவகாரம் : உண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com