பெண் குழந்தை பிறந்தால் அதனை கொண்டாடும் வகையில் 111 மரக்கன்றுகளை நடுகின்றனர் இந்த கிராமத்தினர்.
பெண் சிசு கொலை என்பது தற்போது பரவலாக எங்கும் இல்லை என்றாலும், அங்குமிங்குமாக இருக்கத் தான் செய்கிறது. அல்லது பெண் குழந்தை பிறந்தாலே வம்சம் தழைக்காது, ஆண் தான் வீட்டின் வாரிசு என்று நம்பும் பலரும் இன்றும் இருக்கின்றனர்.
அப்படி இருக்கையில், பெண் குழந்தை தான் வேண்டும், பெண் குழந்தை பிறந்தால் அது நமக்கு கிடைத்த வரம் என நம்புகின்றனர் இந்த கிராமத்தினர்.
ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் இந்த பிபலாந்திரி. இந்த கிராமத்தில், சுற்றுச்சூழல் மற்றும் பெண் குழந்தைகள், இரண்டையும் பாதுகாக்கும் வண்ணம் ஒரு முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இங்குள்ளவர்கள் வீடுகளில் பிறக்கும் ஒரு ஒரு பெண் குழந்தைக்கும் 111 மரக்கன்றுகளை நடுகின்றனர் கிராமத்தினர். அதே கிராமத்தை சேர்ந்த ஷாம் சுந்தர் பலிவால் என்பவர் இந்த முன்னெடுப்பை தொடங்கினார். 2005ல் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பிபலாந்திரி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் ஆக இருந்த ஷாம் சுந்தர் தனது பதவிக்காலத்தில் பள்ளிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல சமூக நலப் பணிகளை மேற்கொண்டவர்.
2000மாம் ஆண்டுக்கு முன்னர் பளிங்கு சுரங்கங்கள், குவாரிகள் போன்றவற்றால், இந்த கிராமம் மற்றும் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு தங்க அடிப்படை வசதிகள் இல்லை, இந்த கிராமத்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்திற்கே அல்லாடி வந்தனர். ராஜஸ்தானின் மற்ற கிராமங்களிலும் பெண் சிசு கொலை தலைவிரித்தாடியது.
இதுவெல்லாம் நடந்துக்கொண்டிருக்க, ஷாம் சுந்தரின் மகளும், நீரிழிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மகள் கிரண் நினைவாக முதன்முதலாக மரம் நட்டார் ஷாம்.
அப்போது தான் தான் கிராமத்தை புணரமைக்கவேண்டும் என்ற யோசனை வலுவாக அவருக்குள் தோன்றியது.
மரங்களை நடவேண்டும் என்றால், சத்துள்ள நிலமும், அதற்கு தேவையான அளவு தண்ணீரும் வேண்டும். ஆனால் குவாரிகள் சுரங்கங்களின் கழிவுகளால் நிலம் பாதிக்கப்பட்டிருந்தது.
கிராமத்தின் பொது நிலத்தில் குப்பைகளை கொட்ட முந்தைய பஞ்சாயத்துகளில் இந்த குவாரிகள் அனுமதிகள் பெற்றிருந்தன. இதற்காக கிரமத்திற்கு ராயல்ட்டியும் கொடுக்கப்பட்டது.
ஆனால் நிலம் பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி கிராம சபை மூலமாக குப்பைக் கொட்டும் அனுமதியை திரும்பப்பெற்றார் ஷாம் சுந்தர்.
கிராமத்தின் வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை ஆராய்ந்தார். நீர் குழாய்கள் நிறுவப்பட்டன, கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டன, உயர்கல்வி மிகவும் சாத்தியமானதாக மாறியது மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் சுத்திகரிப்பு மேம்படுத்தப்பட்டது.
ஒரு பிளே பம்ப்பையும் நிறுவினார்கள். இந்த பைப்பானது குழந்தைகள் விளையாடும் மெர்ரி கோ ரௌண்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஒவ்வொரு முறை குழந்தைகள் இதில் விளையாடும்போதும் நன்னீர் இறைக்கப்பட்டு நிலங்களில் பாய்ச்சப்படும்.
இதன் பிறகே 111 மரக்கன்றுகள் நடும் வழக்கம் கொண்டுவரப்பட்டது
இங்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 60 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு, கிருஷ்ணரை எடுத்து சென்றதை போல கூடைகளில் எடுத்துச் சென்று, மரம் நடும் விழா நடக்கிறது. ஆண்டு தோறும் பெண் பிள்ளைகள் பிறந்தாலும், மரங்கள் நடப்பட்டாலும், பருவ மழைக்காலத்தில் இவர்கள் ஒரு சிறப்பு விழா கொண்டாடுகின்றனர்.
அப்போது கிராமத்தினர் அனைவரும் ஒன்று கூடி மரங்கள் நடுகிறார்கள். வேம்பு, பீப்பல், நெல்லிக்காய், ரோஸ்வுட், நெல்லிக்காய், மூங்கில், கற்றாழை என அனைத்து வகையான மரங்களும் நடப்படுகின்றன.
நடப்படும் மரங்களை குடும்பத்தினர் பராமரிக்க வேண்டும். பெண் பிள்ளை வளருவதை போல மரத்தின் வளர்ச்சியை இவர்கள் கருதுகின்றனர். ரக்ஷா பந்தன் அன்று, தங்களின் சகோதரர்களாக நினைத்து பெண்பிள்ளைகள் இந்த மரங்களுக்கு ராக்கி கட்டுகின்றனர்.
இவர்கள் இங்கு வளரும் கற்றாழையை வைத்து ஷாம்பூ, ஜெல் போன்றவற்றை தயாரித்து வணிகமும் செய்கின்றனர்
பெண் பிள்ளைகள் பிறக்கும் போது, கிராம பஞ்சாயத்தின் கிரண் நிதி யோஜனாவில் ஒரு கட்டணம் செலுத்தப்படுகிறது. பெற்றோர் ஒரு குறிப்ப்பிட்ட தொகையும், நன்கொடையாளர்கள் ஒரு தொகையும் வழங்குகிறார்கள்.
பெண் குழந்தையை கொல்லக் கூடாது, மேலும் 18 வயது ஆகும் வரை திருமணம் செய்து வைக்கக்கூடாது, மற்றும் அவளுக்கு முறையான கல்வி வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்படுகிறது.
இவர்களின் இந்த முயற்சியால், தற்போது கிராமத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 4 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ளன, மேலும் நிலத்தடி நீரின் அளவு 800அடியில் இருந்து 15 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த கிராமத்தை இந்தியாவின் மாடல் கிராமமாக அழைக்கின்றனர். ஷாம் சுந்தர் பலிவாலுக்கு 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust