Death
DeathTwitter

Argentina: உலகக் கோப்பை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; குண்டு பாய்ந்து பெண் பலி- எங்கே?

பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் வெறித்தனமாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியவுடன் பட்டாசுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் எதிரொலித்ததாக இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
Published on

அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் அடையாளம் தெரியாத யாரோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 வயதுப் பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜமேய் வாங்மா பீகாபதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் வெறித்தனமாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியவுடன் பட்டாசுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் எதிரொலித்ததாக இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெண் ஒருவர் இரவு தனது வீட்டில் டி.வி.யில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை பார்த்தபின்பு உறங்கச் சென்றார்.

அப்போது அவரது மார்பில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அதில் காயமடைந்த அந்தப் பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

Death
Argentina: வாத்து விளையாட்டு முதல் பெரிய டைனோசர் வரை அர்ஜென்டினா குறித்த 5 வினோத உண்மைகள்!
Guns (rep)
Guns (rep)Canva

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் காணப்பட்டன.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா பெற்ற வெற்றியை கொண்டாட யாரோ துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக அப்பெண் மீது குண்டு பாய்ந்ததாக கருதப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Death
Argentina : அர்ஜென்டினா வாழ்வதற்கு சொர்க்கமா, நரகமா? - ஒரு பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com