Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப் பணிகள் நிபுணர், பொறியாளர், புவியியளாலர் மற்றும் வழக்கறிஞரும் கூட. நடந்த விபத்து, சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஆபத்துக்கால பாதை பற்றி என்ன பேசினார்?
Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?
Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?Twitter

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 41 பணியாளர்கள் மீட்கப்பட்டது நாடு முழுவதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அறிவிக்கப்பட்டது.

இந்த மீட்பு பணிகளில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ். இவர் ஒரு சுரங்கப் பணிகள் நிபுணர், பொறியாளர், புவியியளாலர் மற்றும் வழக்கறிஞரும் கூட.

பிபிசியிடம் பேசிய அவர், ஒரு சுரங்க கட்டுமானத்தின் முதன்மை சுரங்கம் கட்டி முடித்த பிறகுதான் வெளியேறுவதற்கான வழி அமைக்கப்படும். இந்த முதன்மை சுரங்கம் கட்டுமானத்தில் இருந்ததால் வெளியேறுவதற்கான வழி அமைக்கப்படவில்லை. சுரங்கம் இடிந்து விழுந்தது யாரும் எதிர்பாராத விபத்து எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் முதன்மை சுரங்கம் அமைக்கப்படும் போதே அணுகுபாதை ஒன்று கட்டப்படும். அதன்மூலம் தப்பித்துச் செல்ல முடியும்.

இந்தியாவின் சிக்கலான நிலப்பரப்பில் சுரங்கம் அமைக்கும் போதே வெளியேறுவதற்கான வழி அமைக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம் என டிக்ஸ் கூறியுள்ளார்.

அர்னால்ட் டிக்ஸ் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி பகுதிகள் சங்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த மீட்பு பணிக்காக பெரும் பொருள் செலவு செய்துள்ளோம். இதிலிருந்து நாம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன பயன்? இந்த சம்பவம் குறித்த ஆழமான விசாரணை நடைபெற வேண்டும்" எனவும் அர்னால்ட் டிக்ஸ் கூறியுள்ளார்.

Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?
அமெரிக்கா : 1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?

இப்படிப்பட்ட சம்பவங்களைத் தவிர்க்க சுரங்கம் அமைக்கும் மலைகளின் தன்மையை ஆராய வேண்டும். இமயமலைகளின் தன்மை வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது.

சுரங்கத்தின் கட்டுமானம் ஏன் போதிய அளவு வலிமையானதாக இல்லை என்பதை அறிய வேண்டும் என டிக்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?
Thai Cave Rescue: மரண குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் - மீண்டது எப்படி? திக் திக் கதை!

சர்வதேச அளவில் நிபுணராக அறியப்படும் அர்னால்ட் டிக்ஸ் இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, "நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சுரங்க விபத்து மீட்பு பணிகளிலும் சிறந்தவர்கள். இந்த பணியில் என்னை ஈடுபடுத்திய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்ஸுக்கு நன்றி" எனப் பேசியிருந்தார்.

Uttarakhand: 41 தொழிலாளர்களை மீட்க உதவிய அர்னால்ட் டிக்ஸ் யார்? இறுதியாக என்ன பேசினார்?
"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com