"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னணி என்ன?

சாலைகளில் விற்கப்படும் உலக மேப் முதல் மொபைலில் வரும் கூகுள் மேப் வரை அனைத்துமே உலக அரசாங்கங்கள் நம்மை நம்பவைக்க செய்த பொய்கள் ஏமாற்று வேலைகள் என்கிறது இந்த குழு. இவர்கள் இப்படி கூற எதாவது காரணம் இருக்கிறதா?
"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?
"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?Twitter
Published on

ஆஸ்திரேலியா என்ற ஊரே இல்லை என உலகில் ஒரு கும்பல் சுற்றுவது உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியா இல்லை என்ற சூழ்ச்சிக் கோட்பாட்டை நம்பி வருகின்றனர்.

அவர்கள் நினைக்கும் உலகில் நிச்சயமாக ஆஸ்திரேலியா இல்லை. ஆஸ்திரேலியா என உங்களுக்குக் காட்டப்படும் அனைத்துமே பொய் என அவர்கள் கூறுகின்றனர்.

சாலைகளில் விற்கப்படும் உலக மேப் முதல் மொபைலில் வரும் கூகுள் மேப் வரை அனைத்துமே உலக அரசாங்கங்கள் நம்மை நம்பவைக்க செய்த பொய்கள், ஏமாற்று வேலைகள் எனவும் கூறுகின்றனர்.

யாராவது இன்ஸ்டாகிராமில் உங்களிடம் பேசும் போது தன்னை ஆஸ்திரேலியாக்காரர் என அறிமுகம் செய்துகொண்டால், அவர் ஒரு சர்வதேச உளவு அதிகாரி அல்லது தானாக பேசும் கணினி ஏ.ஐ. என்கின்றனர்.

ஆஸ்திரேலியர்கள் என்று தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் கோரும் யாவரும் நடிகர்கள் என்பது அவர்களின் கருத்து.

"அரசாங்கம் ஏன் ஆஸ்திரேலியா இருப்பதாக மக்களை நம்பவைக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு இடமே உலகில் கிடையாது என்பது தான் உண்மை." என சிலர் அடித்துக் கூறுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் சூழ்ச்சிக் கோட்பாடுகள் குறித்துப் பலரும் பேசுவதைக் காணலாம். இதில் பலர் ஆஸ்திரேலியா இல்லை என நம்புகின்றனர்.

"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

மக்கள் நம்புகின்றனர் என்றால் ஆஸ்திரேலியா இல்லை எனக் கூற எதாவது உருப்படியான காரணம் வேண்டுமே?

பிரிட்டன் அரசு தான் செய்த குற்றத்தை மறைக்க, தனது கைதிகளை ஒரு இடத்தில் வைத்ததாக நம்பவைக்கவே ஆஸ்திரேலியா கற்பனையாக உருவாக்கப்பட்டது என வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இதனைக் கூறுகின்றனர்.

1863 முதல் 1904க்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து அரசு 1,62,000 கைதிகளை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தியது.

பிரிட்டன் அரசு 1,62,000 மக்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு அவர்களை வேறொரு நிலத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகிறது.

"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?
Princess Diana : இன்றும் டயானா மரணம் குறித்து உலாவும் 5 சந்தேகங்கள் - A detailed report

ஆனால் அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தனர். யாரும் நிலத்தை அடையவில்லை. இந்த படுகொலையை மறைக்கவே பிரிட்டன் அரசு ஆஸ்திரேலியா இருப்பதாக உலக மக்களை நம்பவைத்துள்ளது என்பது, மற்றொரு தரப்பு ஆஸ்திரேலியா இல்லை என்பவர்களின் கருத்து.

ஒருவேளை நீங்களே ஒரு விமானத்தைப் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்த்துவிட்டால் என்ன?

உண்மையில் விமானி உங்களை ஆஸ்திரேலியாவுக்கு எல்லாம் அழைத்துச் செல்வதில்லை வானத்தை மூன்று சுற்றிவிட்டு ஒரு தீவுக்கு அழைத்து வருவார். அங்கு இருக்கும் நடிகர்கள் எல்லாரும் அது ஆஸ்தரேலியா என உங்களை நம்பவைப்பார்கள் என அவர்கள் கூறுவர்.

ஆஸ்திரேலியா இல்லை என்பவர்களைக் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா இல்லை தான். நாம் என்ன செய்தாலும் அவர்களை நம்பவைக்க முடியாது.

இணையத்தில் சூழ்ச்சிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் இந்த குழுவும் தொடர்ந்து தங்களது நம்பிக்கையை பரப்பி வருகின்றனர்.

ஒரு நாள் உங்களுக்கே ஒருவர் மெஸ்ஸேஜ் செய்து, "பிரிட்டன் அரசு கொலை செய்த 162000 பேருக்காக போராடுங்கள். ஆஸ்திரேலியா இல்லை என்ற உண்மையை நம்புங்கள்" எனக் கூறலாம்.

"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?
அரசியல் முதல் பயங்கரவாதம் வரை : உலகையே கட்டுப்படுத்தும் 13 குடும்பங்கள் - யார் இவர்கள்?

இதேப் போல நாடுகள் இல்லை என ஜோக் அடிப்பதும், சீரியஸாகவே சூழ்ச்சிக் கதைகளைப் பரப்புவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பின்லாந்து, இத்தாலியில் உள்ள மோலீஸ் மற்றும் பிரேசிலில் உள்ள ஏக்கர் ஆகிய இடங்களும் இல்லை என வாதம் செய்து வருகின்றனர். இவை ஒவ்வொன்றுக்கு பின்னும் இப்படி ஒரு காரணம் இருக்கிறது.

13 குடும்பங்கள் தான் உலகை ஆள்கின்றன, ஒஷாமா பின்லேடன் சாகவே இல்லை, நீல் ஆம்ஸ்ட்ராங் உண்மையில் நிலவில் கால் வைக்கவில்லை என இது பல சூழ்ச்சி கோட்பாடுகள் நம்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"ஆஸ்திரேலியா என்ற நாடே இல்லை" அடித்துச் சொல்லும் கும்பல் - யார் இவர்கள், பின்னனி என்ன?
சூழ்ச்சி கதைகள் : கோவிட்19 டூ 9/11 தாக்குதல் - உலகமே நம்பும் சில Conspiracy Theories

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com