அவனி சதுர்வேதி : வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் - யார் இவர்?

அவனி சதுர்வேதி இதில் பங்கேற்றதின் மூலம், வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
Avani Chaturvedi
Avani ChaturvediTwitter
Published on

ஐப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப் படை இணைந்து நடத்திய ”வீர் கார்டியன் 2023” என்ற கூட்டு போர் பயிற்சியில் பங்கேற்று, வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய பெண் விமானி என்ற சாதனை படைத்திருக்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி.

ஆண்களைப்போன்றே பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து, முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படி ஒரு சாதனை வீராங்கனைதான், 29 வயதாகும் அவனி சதுர்வேதி.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி, ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து முடித்தார்.

தொடர்ந்து ஐதராபாத்தில் இந்திய வான்படை கல்விக்கழகத்தில் பயிற்சி பெற்றார். அதையடுத்து 2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியானார்.

இந்திய விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவனி சதுர்வேதிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது, ஜப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து 'வீர் கார்டியன்-2023' என்ற பெயரில் நடத்திய கூட்டு போர் பயிற்சியில் பங்கு கொள்வது.

இந்த கூட்டு போர் பயிற்சி ஜப்பானின் ஹயாகுரி விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 12 தேதி தொடங்கி 26 தேதி வரை நடந்திருக்கிறது.

இதில் அவனி சதுர்வேதி பங்கேற்றதின் மூலம், வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

நாடு திரும்பிய அவனி சதுர்வேதி தனது அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார்.

Avani Chaturvedi
41 ஆயிரம் அடி, திடீரென தீர்ந்த எரிபொருள், திகைத்துப் போன விமானி - திக் திக் நிமிடங்கள்!

அவர் கூறுகையில், வெளிநாட்டு விமானப்படையுடன் பறக்கும் பயிற்சியில், ஈடுபட்டது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் சர்வதேச பயிற்சியில் ஈடுபட்டது இதுவே முதல் முறை.

இந்திய விமானப்படை ஒரு அருமையான வேலை வாய்ப்பை தருகிறது. போர் விமானத்தில் பறப்பது என்பது உண்மையிலேயே பரவசமானது.

இந்திய விமானப்படையில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், அதை இலக்காக கொண்டிருங்கள். அந்த இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிங்கள்" கூறினார்.

Avani Chaturvedi
Sania Mirza : இந்தியாவின் முதல் பெண் முஸ்லீம் போர் விமானி - பெருமைகொள்ளும் கிராம மக்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com