பெங்களூரு: 11 லட்சம் காரை சரி செய்ய 22 லட்சம் செலவு- நிறுவனம் கூறிய பதில் என்ன?

வெள்ளத்தில் பழுதான தங்கள் காரை சரி செய்வதற்கு சில நிறுவனங்கள் ஆஃபர்களை வழங்கிவரும் சூழலில் அனிருத் கணேஷ் என்பவரின் கதை மோசமான ஒன்றாக இருக்கிறது.
பெங்களூரு: 11 லட்சம் காரை சரி செய்ய 22 லட்சம் செலவு- நிறுவனம் கூறிய பதில் என்ன?
பெங்களூரு: 11 லட்சம் காரை சரி செய்ய 22 லட்சம் செலவு- நிறுவனம் கூறிய பதில் என்ன?Twitter
Published on

கடந்த மாதம் முழுவதுமே பெங்களூரில் பெருவெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் மக்களுக்கு பெரும் பொருள் செலவு ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் பழுதான தங்கள் காரை சரி செய்வதற்கு சில நிறுவனங்கள் ஆஃபர்களை வழங்கிவரும் சூழலில் அனிருத் கணேஷ் என்பவரின் கதை மோசமான ஒன்றாக இருக்கிறது.

அவரின் வோல்க்ஸ் வேகன் காரை செய்ய 22 லட்சம் செலவாகும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அந்த காரின் விலையே 11 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலோ டி.எஸ்.ஐ பெட்ரோல் காரை ட்ராக் வைத்து டோ செய்து ஆப்பிள் ஆட்டோ என்ற நிறுவனத்தில் சர்வீஸுக்காக விட்டார். 20 நாட்கள் கழித்தே அவருக்கு அங்கிருந்து பதில் வந்திருக்கிறது. அப்போது உங்களது கார் முழுவதும் டேமேஜாகிவிட்டது. சரி செய்ய 22 லட்சம் செலவாகும் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன அனிருத் இன்சுயூரான்ஸ் கம்பனியை நாடியுள்ளார். அங்கு உங்களது காருக்கு லட்சம் மட்டுமே இன்சுயூரான்ஸ் தர முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் சரவீஸ் சென்டரில் எஸ்டிமேட் வாங்கிவந்தால் அதற்கு ஏற்றது போல வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

பெங்களூரு: 11 லட்சம் காரை சரி செய்ய 22 லட்சம் செலவு- நிறுவனம் கூறிய பதில் என்ன?
'பார்க்கிங்கா?' பெங்களூர் ஹவுஸ் ஓனர்ஸ் அட்ராசிட்டிஸ்

எஸ்டிமேட் கொடுக்க பொதுவாக 5000 வரை தான் செலவனாகும். ஆனால் அந்த ஷோரூம், அனிருத்துக்கு 44,800 ரூபாய் பில் போட்டிருக்கிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப்போன அவர் வோல்க்ஸ் வேகன் நிறுவனத்துக்கு மெயில் செய்துள்ளார். அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து தனது ஆதங்கங்களை LinkedIn தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அனிருத்தின் பதிவுக்கு பிறகு எஸ்டிமேட் பில்லுக்கு 5000 மட்டுமே போதும் என பதிலளித்துள்ளது நிறுவனம்.

பெங்களூரு: 11 லட்சம் காரை சரி செய்ய 22 லட்சம் செலவு- நிறுவனம் கூறிய பதில் என்ன?
பெங்களூர் டிராஃபிக்கிற்கு GOOD BYE : ஹெலிகாப்டர் டாக்சி அறிமுகம் - ஒரு ரைடுக்கு எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com