காபி ஷாப்பில் கணினியுடன் இளைஞர் - அலுவலகத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அவலம்

Outer Ring Roadக்கு உட்பட்ட சில நிறுவனங்கள், ஒரே நாளில் 225 கோடி நஷ்டத்தையும் சந்தித்தது. மேலும், வேலைக்கு செல்பவர்கள் டிராக்டரில் அலுவலகத்திற்கு சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
காபி ஷாப்பில் கணினியுடன் இளைஞர்
காபி ஷாப்பில் கணினியுடன் இளைஞர் Twitter
Published on

காபி ஷாப்பில் மேஜை போட்டு, கணினியுடன் வேலை பார்க்க துவங்கிய இளைஞரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களாக பெங்களூரில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் Outer Ring Roadக்கு உட்பட்ட சில நிறுவனங்கள், ஒரே நாளில் 225 கோடி நஷ்டத்தையும் சந்தித்தது. மேலும், வேலைக்கு செல்பவர்கள் டிராக்டரில் அலுவலகத்திற்கு சென்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் வேலைக்கு அலுவலகம் செல்ல முடியாததால் ஒரு இளைஞர் காபி ஷாப்பில், தன் கணினியை வைத்துக்கொண்டு வேலை பார்க்க துவங்கியுள்ளார். இவரைப் புகைப்படம் எடுத்து சங்கேத் சாஹு என்ற நபர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த இளைஞருக்கு அருகில் மற்றொரு பெண் மடிக்கணினி வைத்து வேலை பார்க்கிறார்

மடிக் கணினியை வைத்து இம்மாதிரி காப்பி ஷாப்பில் வேலை பார்ப்பவர்களை மெட்ரோ நகரங்களில் அதிகம் பார்க்கலாம்

காபி ஷாப்பில் கணினியுடன் இளைஞர்
Bengaluru : தலைக்கு 50 ரூபாய் கொடுத்து டிராக்டரில் சவாரி செய்யும் ஐடி ஊழியர்கள் | Video
outer ring road flooded in bengaluru
outer ring road flooded in bengalurutwitter

ஆனால் கணினி வைத்து வேலை பார்த்துக்கொண்டிருப்பதால் இவர் கவனம் ஈர்த்துள்ளார். பெங்களூரு மழை காரணமாக சாலைகள் மட்டுமல்லாமல், வெள்ள நீர் அலுவலகங்களிலும் புகுந்ததால் இந்த நிலை.

இதனை பார்த்த இணையவாசிகள், வேலை பார்க்க நல்ல இடம் தான், ஆனால் காபி, டீ குடிக்க வேண்டும் என்றால், எங்கு செல்வார் இவர்? என கேலியாக கேட்டனர். அதற்கு இன்னொருவர் காபி குடிக்க இவர் ஒரு வேளை அலுவலகம் செல்லலாம் என சொல்லியிருந்தார்

காபி ஷாப்பில் கணினியுடன் இளைஞர்
பெங்களூரு: போக்குவரத்து நெரிசலால் ஒரே நாளில் 225 கோடி இழப்பு- IT நிறுவனங்களின் பரிதாப நிலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

AustraliaEnglandsydneyqueen elizabeth 2Letter

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com