Bengaluru : தலைக்கு 50 ரூபாய் கொடுத்து டிராக்டரில் சவாரி செய்யும் ஐடி ஊழியர்கள் | Video

ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டரில் தலைக்கு 50 ரூபாய் கொடுத்துப் பயணித்துள்ளனர்.
IT Employees
IT EmployeesTwitter
Published on

கர்நாடகாவில் பல இடங்களில் மிகத் தீவிரமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெங்களூரில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரினால் மூழ்கி மக்கள் வெள்ளத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை காரணமாகச் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெங்களூரு நகரில் உள்ள பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மழையால் எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டரில் தலைக்கு 50 ரூபாய் கொடுத்துப் பயணித்துள்ளனர்.

IT Employees
பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி

அந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களால் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மழை காரணமாக அன்று ஓரே நாளில் Outer Ring Road Companies Associationக்கு உட்பட்டு வரும் ஐடி மற்றும் பேங்க்கிங் நிறுவனங்கள் அனைத்திற்கும், மொத்தம் 28 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் 225 கோடி ரூபாய் ) இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IT Employees
பெங்களூர்: விபசார வழக்கில் ஆண்களை கைது செய்ய கூடாது - கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com