காவல்நிலையத்தில் கானா பாட்டு: கலக்கும் 5ம் வகுப்பு சிறுவன் - வைரல் வீடியோ

கேரளாவின் நட்டுக்கல் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நெட்டிசன்கள் அந்த சிறுவனது திறமையையும் அதனை ரசிக்கும் காவலர்களையும் பாராட்டி வருகின்றனர்.
Nattukal Police Station
Nattukal Police StationTwitter
Published on

கேரளாவிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் 5ம் வகுப்பு சிறுவனான யாதவ் கிருஷ்ணா நாற்காலியைத் தட்டி மலையாள குத்துப்பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

என்ன தான் போலிஸ் படம் பார்த்து விசில் அடித்தாலும் நேரில் காவலர்களை சந்திக்கும் போதும் காவல் நிலையத்துக்குள் நுழையும் போதும் நமக்குள் இனம் புரியாத சங்கட உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இங்கோ ஒரு சிறுவன் காவல் நிலையத்தில் நாற்காலியைத் தட்டி பாட்டுப் பாடி காவலர்களுடன் மகிழ்ந்திருக்கிறார்.

கேரளாவின் நட்டுக்கல் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. நெட்டிசன்கள் அந்த சிறுவனது திறமையையும் அதனை ரசிக்கும் காவலர்களையும் பாராட்டி வருகின்றனர்.

காவலர்கள் கூறுவதன் படி, அந்த சிறுவன் அருகில் உள்ள குளத்தில் மீன்களை வேடிக்கைப் பார்பதற்காக வந்திருக்கிறார். அப்படியாக காவலர்கள் அந்த சிறுவனைப் பார்த்துள்ளனர்

Nattukal Police Station
Pune : 20 நாய்களுடன் அடைக்கப்பட்ட 11 வயது சிறுவன் - பெற்றோர் மீது வழக்கு

சிறுவன் யாதவின் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக அவருக்கு செண்டை மேளம் பரிசாக அளித்துள்ளனர். அத்துடன் காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சிறுவன் பாடும் வீடியோவையும் பகிர்ந்திருக்கின்றனர்.

Nattukal Police Station
பெற்றோரின் செல்ஃபோனை ஹேக் செய்த 13 வயது சிறுவன் - காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com