பெற்றோரின் செல்ஃபோனை ஹேக் செய்த 13 வயது சிறுவன் - காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

தம்பதியரின் வீட்டுச் சுவரில் சில ‘சிப்’புகளும் புளூடூத் சாதனங்களும் பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் யாரோ தங்களை வேவுபார்க்கிறார்களோ என காவல்துறையினரிடம் அவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
Hack
HackCanva
Published on

வீட்டுக்குள், வீட்டை விட்டு இறங்கி வீதிக்கு வந்தால் பேருந்தில், தொடர்வண்டியில், பொது இடங்களில் என எந்தப் பக்கம் திரும்பினாலும், எல்லோரிடமும் ஒரே செல்ஃபோன் மயம்தான்!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை தான். ஆனால், அதுவே ஒரு உலகளாவிய சிக்கலாக மாறிவிட்டால் அதைக் கவனிக்கவும் வேண்டும்தானே?

குறிப்பாக, செல்பேசி, இணைய வசதிகளில் இருக்கும் அபாயங்களை அறியாமல் அவற்றைக் கையாளும் குழந்தைகளின் போக்கு, உடனடி கவனத்தைக் கோருவதாக இருக்கிறது.

ஆன்லைன் கேம் எனப்படும் இணைய ஆட்டங்களில் ஆர்வம்கொண்டு, ஒரு கட்டத்தில் அதிலேயே மூழ்கிப் போய்விடும் குழந்தைகளுக்கு, அது மட்டுமில்லாமல் வேறு பல சிக்கல்களும் சேர்ந்து வருகின்றன என்பதுதான் கூடுதல் துயரம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், இப்படியுமா நடக்கும் எனப் புருவம் உயர்த்தவைக்கிறது.

பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவனின் பெற்றோர், இணையக் குற்றத் தடுப்பு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார்கள். அந்தத் தம்பதியரின் முகநூல் பக்கத்தில் யாரோ ஒரு விசமி ஆபாசக் காட்சிகளையும் படங்களையும் பதிவேற்றி வருகிறார் என்பது புகாரின் சாரம்.

Using  Mobile
Using MobileCanva

அவர்களின் செல்பேசிகள் இரண்டையும் யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் அதிலிருந்த எல்லா தொலைப்பேசி எண்களையும் படங்கள் உள்பட்ட பல தரவுகளையும் முழுக்க அழித்துவிட்டார்கள் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட இணையக்குற்றத் தடுப்பு காவல்துறையினர், விசாரணையில் இறங்கினர்.

முதல் கட்டமாக, அந்தச் சிறுவனின் மாமா ஒருவருடைய செல்பேசியிலிருந்துதான் ஆபாசமான முகநூல் பதிவுகள் இடப்பட்டன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த செல்பேசியைக் குறிப்பிட்ட சிறுவனும் அடிக்கடி பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததும், விசாரணை அவன் பக்கம் திரும்பியது.

குடும்ப உறுப்பினர்களை வரவழைத்த காவல்துறையினர், சிறுவனுடைய செயல்பாடுகளைக் கவனித்துவரும்படியும் வித்தியாசமாக நடந்துகொண்டால் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

Hack
Uber Travis Kalanick : விரக்தியிலிருந்து வியூகங்கள் வரை - ஊபர் நிறுவனரின் வெற்றி கதை!

இதற்கிடையே, தம்பதியரின் வீட்டுச் சுவரில் சில ‘சிப்’புகளும் புளூடூத் சாதனங்களும் பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் யாரோ தங்களை வேவுபார்க்கிறார்களோ என காவல்துறையினரிடம் அவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

வரிசையாக நடைபெற்ற சம்பவங்கள், குறிப்பிட்ட சில காட்சிகளை வைத்து, அந்தச் சிறுவன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என காவல்துறை முடிவுக்கு வந்தது.

அதை அவனுடைய பெற்றோரிடம் எடுத்துக்கூறி, அவனிடம் பேசுமாறு கூறினார்கள்.

Mobile Addiction
Mobile AddictionCanva

அவர்களும் அதன்படி சிறுவனிடம் கண்டிப்புடன் கேட்க, முதலில் யாரோ ஹேக்கர் பெற்றோர் இரண்டு பேரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் அவர்கள் மிரட்டலுக்குப் பயந்துதான் இப்படிச் செய்ததாகவும் பதில் கூறினான்.

ஆனால், கடைசியில் அதுவும் பொய் என்பதும் அவனே பெற்றவர்களின் செல்பேசிகளில் தன் திறமையைக் காட்டியிருக்கிறான் என்பதும் உறுதியானது.

இதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசிய ஜெய்ப்பூர் இணையக்குற்றத் தடுப்புப் பிரிவு காவல் வல்லுநர் முகேஷ் சௌத்ரி, இப்படியொரு விவகாரம் முதல்முதலில் இப்போதுதான் வந்திருக்கிறது; யாரோ தங்களை வேவுபார்ப்பதாகச் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில்தான் விவகாரத்தைக் கண்டுபிடித்தோம் என்றார்.

Hack
சூட்கேஸ் தொலைஞ்சு போச்சு - இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த பயணி

பெற்றோர் கேட்டுக்கொண்டதன் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையின் சார்பில் எந்த வழக்கும் பதியப்படவில்லை.

ஆனால், இதை முன்னிட்டு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ள முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் கூறுவதைப்போல, "இப்போதைய காலகட்டத்தில், யாராக இருந்தாலும் அடிப்படையான குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு அவசியமாகிவிட்டது; அத்துடன், நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட கருவிகளைக் கையாளும் குழந்தைகளிடம் எப்போதும் ஒரு கண் வைத்தபடி இருக்கவேண்டும்.” என்பதைப் புறக்கணித்துவிட முடியுமா?

Hack
6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com