ஹப்பா கட்டூன் மலைத்தொடரின் வழியே செல்லும் போது ஒரு கப் கப்புசினோவுடன் உள்ளூர் வாசிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட வெவ்வேறு விதமான நபர்களை ஒரு மேஜையில் காணலாம். ஸ்ரீநகரில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில், வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான குரேஸின் தாவார் பகுதியில் உள்ள ‘தி லாக் ஹட் கஃபே’வில் தான் இந்த மயக்கும் காட்சியை காண முடியும்.
"ஒரு சுற்றுலாப் பயணி, உள்ளூர் மற்றும் ராணுவ வீரர் ஒருவருடன் ஒரே மேசையில் காபி குடிப்பதையும், பல்வேறு பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதையும் காண்பதென்பது முற்றிலும் வித்தியாசமான அனுபவம்" என்கிறார் கஃபேவைக் கண்காணிக்கும் ராணுவ அதிகாரி ஒருவர்.
குரேஸ் செக்டார் எல்லையை பாதுகாக்கும் இந்திய இராணுவத்தால் நடத்தப்படுகிற இந்த கஃபே கடந்த ஆண்டு சர்வதேச காபி தினத்தன்று திறக்கப்பட்டது.
மேலும், “அதிகமான சுற்றுலாப் பயணிகளை இந்தப் பகுதிக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வெற்றிகரமான ஒரு வணிகத்தை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம்,” என்று அந்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், எல்லைப் பகுதி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார். “இப்போது இங்கு நிறைய மாறிவிட்டது. குரேஸில் பதினான்கிற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்கள் மற்றும் வாடகைக்கு தங்குமிடங்கள் வந்துள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகை தருகின்றனர்,” என்று அந்த அதிகாரி கூறினார். உள்ளூர்வாசிகள் தங்கள் ஓட்டலில் பயிற்சி பெற்று மற்ற உணவகங்களில் வேலை செய்கிறார்கள் என்று கூறினார்.
பைக் ஓட்டுபவர்கள், மலையேற்றம் செல்பவர்கள் ஆகியோருக்கு ஒரு கப் ரோஸ்டட் பீன்ஸ் காபி சாப்பிடுவதற்கு லாக் ஹட் கஃபே சரியான இடமாகும்.
இங்கு ஒவ்வொரு வார இறுதியில் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு நிகழ்வுகள் மற்றும் இசை இரவுகளை ஏற்பாடு செய்து வருகிறது. குரேஸின் குறைந்து வரும் டார்ட்-ஷின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு பல உள்ளூர் கலைஞர்களும் கஃபேவின் நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றனர்.
முக்கியமாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு, குரேஸ், உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுகிறது. அப்போது, இராணுவமும் உள்ளூர் மக்களும் இந்த நேரத்திற்கு முன்னதாகவே அத்தியாவசியப் பொருட்களை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய பதிவொன்றில், “இது 5 ஸ்டார், 7 ஸ்டார் அந்தஸ்த்து அல்ல, 10 ஸ்டார் அந்தஸ்த்திற்கு தகுதியான ஒரு இடம்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு & காஷ்மீர் முழுவதும் உள்ள எல்ஓசி கிராமங்களுக்கு அருகில் இதுபோன்று இன்னும் பல கஃபேக்கள் திறக்கப்பட்டால், எல்லையின் இருபுறமும் அமைதியைக் கொண்டுவருவதில் அது முக்கிய பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust