காபி குடிக்காத நாட்களே இல்லை என்று சொல்லும் காபி பிரியர்கள் உண்டு. காபி இல்லாமல் என் நாளே ஓடாது என்றும் சொல்வர். தூங்கி எழுந்தவுடன் காபி குடிக்கவில்லை என்றால் எனக்குத் தலைவலி வரும் எனும் புலம்புவார்கள் அதிகம். காபி குடிக்காவிட்டால், என்னால் மலம் கழிக்க முடியாது என்றும் சொல்பவர்கள் உண்டு. காபியை அவர்களது வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒன்று போல வாழ்வார்கள்…
சிலர் தனக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்தும், தெரிந்தும் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகக் காபி குடிப்பார்கள். இதற்குக் காரணம் சுவை என்று நினைக்காதீர்கள். சுவையல்ல... காபியில் உள்ள கெஃபைன், உங்களைப் போதைக்கு அடிமையாக்குவது போல அடிமையாக்கி வைத்துள்ளது.
காபி 400 ஆண்டுகளுக்கு முன்பு காபி கொட்டைகளாக இந்தியாவுக்கு வந்தது என வரலாறு சொல்கிறது. சூஃப்பி செயின்ட்ஸ்தான் முதலில் காபியைப் பயன்படுத்தினார்கள். அரபிக் வார்த்தையான qahhwat al-bun (இதன் அர்த்தம் ‘Wine of the bean’) என்ற வார்த்தையிலிருந்து வந்தது இதன் பெயர்.
சூஃப்பி செயின்ட்ஸ் நீண்ட நேரமாகச் செய்யப்படும் தங்களது மதம் தொடர்பான சடங்குகள் நடைபெறும்போது அவர்கள் விழித்துக்கொண்டிருக்க இந்த காபியைப் பருகினார்கள். அவர்கள் பருகியது பால், சர்க்கரை சேர்க்காத கொட்டை காபி… நாம் குடித்துக் கொண்டிருக்கும் பால், சர்க்கரை சேர்த்த ‘இன்ஸ்டன்ட் காபி’ அல்ல... பாபா புதன் என்கிற சூஃப்பி கர்நாடகாவில் உள்ள சிக்கமகளூர் மலையிலிருந்தார். அவர் 7 காபி கொட்டைகளை அவரது மெக்கா பயணத்திலிருந்து எடுத்து வந்தார். அவர்தான் சந்திரகிரி மலைப்பகுதிகளில் காபி கொட்டையை நட்டு வளர்த்தார். அவரும் அவரது சீடர்களும் இதைப் பருகினர். பின் இந்தப் பழக்கம் அங்கிருந்த உள்ளூர் மக்களுக்குப் பரவியது. காபி மரம் வளர்ந்த அந்த மலைப்பகுதி ‘பாபா புதன்கிரி’ என்றே அழைக்கப்பட்டது.
17-வது நூற்றாண்டில், காபி பிரபலமானது. அப்பர்-கிளாஸ் இந்தியர்களிடம் பரவியது. ‘முகல் நகரங்களில்’, இது முக்கியமான பானமாகப் பிரபலமானது. காபி ஹவுஸாக (Coffee House) வளர்ந்தது. தில்லி ரெட் ஃபோர்ட், சாந்தினி சவுக் ஏரியாவில் பிரபலமானது. இஸ்லாமிய உலகத்தில் காபி குடிப்பதே முதல் சாய்ஸ்... காபியை ‘முஸ்லிம் டிரிங்க்’ என்று சொல்கின்றனர்.
1600 CE-யில் போப் குடித்ததால், ‘கிரிஸ்டியன் பெவரேஜ்’ என்றும் சொல்கிறார்கள். இன்று காபி உற்பத்தியால் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காபி உற்பத்தி நடைபெறுகிறது. இப்படி உருவான காபி, உண்மையில் நமக்கு நன்மையா? தீமையா?
முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது, காபி என்றாலே காபி பீன்களால் (காபி மர கொட்டையால்) தயாரிக்கப்பட்ட சூடான கஷாயம். அதுதான் காபி… பாலும் சர்க்கரையும் சேர்த்தால் அதற்குப் பெயர் காபி அல்ல… உடலைக் கெடுக்கும் மோசமாக்கும் பானம்.
காபி என்று சொன்னாலே முதலில் அதில் உள்ள கெஃபைன் தான் நினைவுக்கு வரும். காபியில் சில ஆன்டிஆக்ஸிடன்ஸ் (Anti-oxidants) உண்டு. ஆனால், எப்படி காபியை பருகினால் அது கிடைக்கும் என்ற சில வழிமுறைகளும் உள்ளன. உலகளவில் மிக விருப்பமான பெவெரேஜ் உணவுகளில் காபிக்கு முதல் இடம்.
தொடர்ந்து காபி குடிப்பதால் இதயத்தில் உள்ள அரொட்டா எனும் ரத்த நாளம் தனது வளைவுத்தன்மையை இழந்துகொண்டே போகும். மிகவும் இறுக்கமான ரத்தநாளமாக மாறும். இந்த அரோட்டா ரத்த நாளம்தான் இருப்பதிலே பெரிய ரத்தநாளமாகச் சொல்லப்படுகிறது. இப்படி இந்த ரத்தநாளம் நாளுக்கு நாள் இறுக்கமாக, இறுக்கமாக முடிவில் இதய நோயாளியாகத் தள்ளப்படுவீர்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பவர்
ஒரு நாளைக்கு 1-3 கப் காபி குடிப்பவர்
ஒரு நாளைக்கு 3 கப் மேல் காபி குடிப்பவர்
காபி என்பது வெளிநாட்டவர்களுடைய விருப்பமான பானம். குளிர் நாடுகளில் சூடாகக் குடிக்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதுவும் அவர்கள் குடிப்பது பால் சேர்க்காத காபி. அவர்கள் பால் சேர்க்காத காபியில், சர்க்கரைகூடச் சேர்க்காமல் பருகுவார்கள். கசப்பாக இருக்கும். இது உடலைப் பெரிதளவில் பாதிக்காது. அளவாகக் குடித்தால், இதயத்தையோ மற்ற உறுப்புகளையோ பெரிதாகப் பாதிக்காது.
சர்க்கரை சேர்த்தால் கூடுதல் கெடுதிதான். சர்க்கரை, பால் சேர்க்காத காபி, ஒரு நாளைக்கு ஒரு கப் எனக் குடிப்பதால் தீமைகள் பெரிதளவில் இல்லை. கெஃபைன் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும். இதுவும் சர்க்கரை சேர்த்தால், உடல்பருமன், புற்றுநோய் காரணியாகவும் உருவாகிறது.
தூக்கமின்மை தொந்தரவு
நரம்புத் தளர்ச்சி
செயற்கையான வேகம் கிடைத்து ரெஸ்ட்லெஸ்ஸாக உணர்வது
வயிறு அப்செட்
குமட்டல், வாந்தி தொல்லை
இதயத் துடிப்புச் சீரற்றதாக இருக்கும்
மூச்சின் அளவு சீரற்றதாக மாறும்
தலைவலி
பயம், காதில் சத்தம் வருதல் போன்ற மனப் பிரச்சனைகள்
சீரற்ற இதயத் துடிப்பு நோய்
நெஞ்சு வலி
சீக்கிரம் வயசான தோற்றம்
குழந்தைகள், சிறுவர்கள்
பயப் பிரச்னை இருப்பவர்கள்
மேனியா, ஃபோபியா உள்ளவர்கள்
பைபோலார் டிஸ் ஆர்டர்
அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள்
இதய நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள்
டையாரியா இருந்தால்
வலிப்பு நோயாளிகள்
ரத்த அழுத்த நோயாளிகள்
அடிக்கடி மலம் கழிப்பவர்கள்
சிறுநீரக நோயாளிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள்
கண் பார்வை தெளிவாக இல்லாதவர்கள்
கண்ணாடி அணிபவர்கள்
பொதுவாக ஆரோக்கியமானவர், காபி குடித்த 30 நிமிடத்திலே கண்களில் பிரஷர் ஏறும். 90 நிமிடங்கள் வரை அந்த பிரஷர் மிக தீவிரமாக இருக்கும்.
எலும்பு, மூட்டுத் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள்
எலும்புருக்கி நோய் உள்ளவர்கள்
இப்ப இந்தியா நாட்டுக்கு வந்து பார்த்தால், காபியில் அதிகளவு பால், சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். இது பெரும் பிரச்சனை. பால், மனிதர்களுக்கான உணவு அல்ல. மனிதர்களுக்குத் தேவையான உணவும் அல்ல.. மேலும் சர்க்கரை, கார்சினோஜென் அதாவது புற்றுநோய் காரணியாகிறது காபியின் கெஃபைன். இதெல்லாம் சேர்ந்து மொத்த மெட்டபாலிசத்தை சீர்குலைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகளைக் கொடுக்கும். இதயத்தைப் பாதிக்கும். கல்லீரலுக்குப் பிரச்னை… கழிவு நீக்கத்தில் தடை ஏற்படுத்தும். கெஃபைன் உடலில் சேர, சேர மூளை நரம்புகள் பாதிக்கும். மறதி, நினைவாற்றல் போன்ற செயல்பாடுகளின் இயல்புதன்மை நீங்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
காபி இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பவர்கள், காபியை ஒரு நாளைக்கு ஒரு முறை எனக் குடியுங்கள். ஆனால், அதில் பாலோ சர்க்கரையோ சேர்க்க கூடாது. இப்படிக் குடித்தால் உங்களுக்குக் கெடுதல் குறைவு. பின் வாரம் 2-3 முறை குடிப்பதை பழக்கமாக்குங்கள். பின்னர் வாரம் ஒரு முறை எனக் குடிக்கும் பழக்கத்துக்கு வரலாம்.
எதாவது ஒரு சூழலில், வேலையில், விழித்திருக்க வேண்டிய தருணத்தில் கொஞ்சம் செயற்கையாக நீங்கள் புத்துணர்வை பெற பால், சர்க்கரை சேர்க்காத காபி குடிக்கலாம். பகல் 11 மணிக்கு மேல் குடிப்பது ஓகே. இரவு 7 மணிக்கு மேல் கட்டாயம் குடிக்கக் கூடாது. இரவு பணியாளர்கள், வெதுவெதுப்பான வெந்நீர், சீரக நீர், கிரீன் டீ, புதினா டீ பருகலாம்.
நீங்கள் தினமும் ஐஸ்கிரீம் சாப்பிடுவீர்களா? பலரும் இல்லை... அதாவது, 99.9% இல்லை. எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல எப்போதாவது காபியைக் குடியுங்கள். இதனால் உங்களுக்குக் கெடுதலோ பாதிப்போ இதய நோயோ கல்லீரல் பிரச்னையோ மூளை தொடர்பான தொந்தரவுகளோ வராது.
கட்டாயம் குடிக்கக் கூடாது. இரவெல்லாம் கல்லீரலும் பித்தப்பையும் கழிவு நீக்கம் செய்து, உடலைப் புதுப்பித்து அடுத்த நாளைக்கு நம்மைத் தயாராக்கும். தூங்கி எழுந்ததும் பசி இருக்காது. அது கழிவு நீக்கம் செய்யும் நேரம். அந்த நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிக்க வயிறு புண்ணாகும். வயிற்று எரிச்சல், அல்சர் நோய் வரும். எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் தொந்தரவுகள் தலைதூக்கும்.
பொதுவாக, காலை எழுந்ததும் பசிக்காது. இது ஆரோக்கியமானவர்களின் நிலை. காலை எழுந்ததும் பசிக்கிறது என்றால், அவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனையும் செரிமானப் பிரச்சனையும் மலச்சிக்கலும் உள்ளன எனப் புரிந்துகொள்ளலாம். இது பசியாக இருக்காது, எரிச்சல் உணர்வுதான் உங்களுக்குப் பசியாக உணரப்படலாம். அப்படியே பசித்தது என்றால், பழச்சாறுகளோ பழங்களோதான் ஏற்றதே தவிரக் காபியோ டீயோ நிச்சயம் கிடையாது. நீராகாரம், பழச்சாறுகள், பழங்கள் மட்டுமே வெறும் வயிற்றில் சாப்பிடப் பாதுகாப்பானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust