வருடத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை செல்லும் சுற்றுலாவில் அதிகம் கூட்டமில்லாத அமைதியான இடங்களுக்கு செல்ல நினைப்பீர்களென்றால் சத்தீஸ்கர் தான் சிறந்த தீர்வு.
பழமையான நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய கோவில்களுடன் கண்ணைக்கவரும் நிலப்பரப்புகளும் சத்தீஸ்கரில் இருக்கின்றது.
இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுமளவு விவசாயத்தில் செழித்திருக்கும் சத்தீஸ்கரில் குறிப்பிடத்தக்க பழங்குடி மக்களின் கலாச்சாரங்களையும் கவனிக்க முடியும்.
சத்தீஸ்கருக்கு சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் அதிகமாக அறியப்படாத 5 இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் 245 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இது 1976ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
காட்டெருமை, புலிகள், குரைக்கும் மான்கள், சிறுத்தைகள் பாம்புகள் என பலவகை உயிரினங்களுக்கு வீடாக இருக்கிறது இந்த சரணாலயம். நீங்கள் ஒரு இயற்கை விரும்பியாக இருந்தால் நிச்சயமாக இந்த சரணாலயத்தைப் பார்வையிட வேண்டும்.
குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த சரணாலயத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் இடையிலான மாதங்களில் தான் செல்ல முடியும்.
சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ள இந்த பூங்கா 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அடர்த்தியான தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்று.
ஆசியாவில் பல்லுயிர்தன்மை மிகுந்த நதிகளில் ஒன்றான கேங்கர் நதி இந்த தேசிய பூங்காவின் வழியாக பாய்வதனால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.
குள்ளநரிகள், ஹைனாக்கள், சுட்டி மான் மற்றும் ட்ராங்கோ பறவைகள் என பல உயிரினங்களை இங்கு பார்க்க முடியும். இந்த தேசிய பூங்காவில் சஃபாரி செல்வதும் அற்புதமான அனுபவத்தை வழங்கும்.
இந்தியாவின் நயகரா அருவி என அழைக்கப்படுவது சித்ரகோட் அருவி. சத்தீஸ்கரின் பாஸ்டர் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கையான அருவியாகும். 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியின் அகலம் 985 மீட்டர். வியப்பூட்டும் இந்த அருவி இந்திராவதி நதியில் இருந்து உருவாகிறது. இந்த நதியையும் பார்வையிட ஜூலை முதல் அக்டோபர் மாநிலங்கள் தான் சிறந்ததாக இருக்கும்.
வடக்கு சத்தீஸ்கரில் அமைந்துள்ள மெயின்பட் என்ற அழகிய மலைப்பிரதேசம் குறுத்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. சுற்றிலும் பசுமையான அடர்ந்த காடு, ஆழமான பள்ளத்தாக்குகள், அருவிகள் பாய்ந்து ஓடும் ஓடைகள் என இயற்கையின் முடிவில்லாத நடனத்தை நாம் இங்கே பார்க்கலாம்.
இதனை சத்தீஸ்கரின் மினி திபெத் அல்லது மினி சிம்லா என அழைக்கின்றனர்.இந்த பகுதியில் திபெத்திய அகதிகள் வசித்து வருகின்றனர்.
சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொள்ளும் யாவரும் மறக்காமல் செல்லும் நகரம் தாம்தாரி. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த வளமான சமவெளிப்பகுதிக்கு செல்வது சிறப்பானதாக இருக்கும்.
14 ஆம் நூற்றாண்டின் சாளுக்கியப் பேரரசின் தாயகமாக இருந்த இந்த நகரம், பல கோயில்கள் மற்றும் பழங்குடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust