சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் தனது பதவியை இழந்துவருகிறார் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாஜக வெற்றிபெறும்பட்சத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், மாநில பாஜக தலைவர் அருண் சவ், துர்க் எம்பியும் பூபேஷ் பாகேலின் மருமகனுமான விஜய் பாகேல், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக தலைவர் ஜெனரல் செயலாளர் ஓ.பி.சௌத்ரி ஆகியோருக்கு நடுவில்தான் முதல்வர் பதவிக்கான போட்டி இருக்கும்.
முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பெரிய முகங்களில், முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், பாஜக தேசியத் துணைத் தலைவர் சரோஜ் பாண்டே மற்றும் முன்னாள் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் அவர்களுக்கு இடையில் ராமன் சிங் முதல்வராவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பாஜக ஆளும் மாநில அரசுகளில் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வராவது அரிதானதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது.
ஓபிசி வகுப்பில் ஓபிசியில் பிலாஸ்பூர் எம்பியும் பாஜக மாநிலத் தலைவருமான அருண் சாவோ, தரம்லால் கவுசிக், துர்க் தொகுதி எம்பி விஜய் பாகேல், நாராயண் சண்டேல், முன்னாள் அமைச்சர் அஜய் சந்திரகர் மற்றும் இளைஞர் தலைவர் ஓபி சௌத்ரி ஆகியோர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
சத்தீஸ்கரில் மாநிலத்தில் பாங்குடியின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பழங்குடி ஒருவர் முதல்வராகவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.
அந்தவகையில் மத்திய இணை அமைச்சர் ரேணுகா சிங், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ராம்விசார் நேதம், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் விஷ்ணுதேவ் சாய், பாஜக தேசிய துணைத் தலைவர் லதா ஆகியோரின் பெயர்கள் பேசப்படுகின்றன.
எஸ்சி, எஸ்டி பிரிவில் இருந்து முதல்வர்கள் உருவாவது கடினமானது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ராமன் சிங், அருண் சவ், பூபேஷ் விஜய் பாகேல், ஓ.பி.சௌத்ரி ஆகியோரில் யார் என்பதுதான் மக்கள் முன்னிருக்கும் கேள்வி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust