சீனாவை அச்சுறுத்திவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
உருமாறியுள்ள ஓமைக்ரான் BF.7 திரிபு வைரஸ் சீனாவில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், இந்த பாதிப்புகள் இந்தியா உட்பட பல நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் குறைந்தது 4 பேர் இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் இருவருக்கும், ஒடிசா மாநிலத்தில் இரண்டு பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் இந்தியாவில் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த 2019ல் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகையே புறட்டிப்போட்டது. ஊரடங்குகள், மரணம், தடுப்பூசிகள் என, கடந்த இரண்டு வருடங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
BF.7 ஓமைக்ரான் BA.5 திரிபு வைரஸில் ஏற்பட்ட மாறுபாடாகும். BF.7 என்பது BA.5.2.1.7க்கான பெயர், இது BA.5 துணை மாறுபாட்டிலிருந்து உருவானதாகும்.
கடந்த 6 மாதக் காலமாக கொரோனா பாதிப்புக் குறைந்து மீண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் சீனாவில் தொடங்கியுள்ள இந்த பாதிப்பு, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் கோவிட் பரவுவதை அடுத்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlus