2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?

சிறுவனது அம்மாவுக்கு அன்று உடல்நிலை சரியாக இல்லாததால் தனியாக லிஃப்டில் சென்றுள்ளான். கீழே இறங்கத் தொடங்கிய லிஃப்ட் 2வது மாடியில் நின்றுவிட்டது. சிறுவன் கதவை தட்டியும் அவசரநிலை பட்டனை அழுத்தியும் கத்தியும் உதவி கேட்டுள்ளான். ஆனால் யாரும் வந்து திறக்கவில்லை.
2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?
2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?Twitter
Published on

டெல்லியின் ஃபரிதாபாத்தில் மோசமான அப்பார்ட்மெண்ட் பராமரிப்பு காரணமாக 8 வயது சிறுவன் 2 மணி நேரம் லிஃப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அந்த 2 மணி நேரம் பதட்டப்படாமல் சிறுவன் செய்த விஷயம் தான் அனைவரையும் கவனிக்க வைத்தது. என்ன ஆயினும் மோசமான பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் அந்த குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

ஃபரிதாபாத்தில் உள்ள ஓமாக்ஸ் ஹைட்ஸ் சொசைட்டி என்ற அப்பார்ட்மெண்டில் வசிக்கும் சிறுவன் கர்வித். இவரது தந்தை பவான் சாவ்லா குருகிராமில் பாணியாற்றி வருகிறார்.

அப்பார்ட்மெண்டின் 4வது மாடியில் கர்வித், பவான் சாவ்லா மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் வழக்கம் போல டியூசன் போவதற்காக லிஃப்டில் ஏறியுள்ளான் சிறுவன் கர்வித்.

பொதுவாக உடன் வரும் அம்மாவுக்கு அன்று உடல்நிலை சரியாக இல்லாததால் தனியாக லிஃப்டில் சென்றுள்ளான். கீழே இறங்கத் தொடங்கிய லிஃப்ட் 2வது மாடியில் நின்றுவிட்டது. திறக்கவுமில்லை.

சிறுவன் கதவை தட்டியும் அவசரநிலை பட்டனை அழுத்தியும் கத்தியும் உதவி கேட்டுள்ளான். ஆனால் யாரும் வந்து திறக்கவில்லை. மனதில் பயம் ஏற்பட்டதும் "இக்கட்டான சூழ்நிலைகளில் பதட்டப்படக் கூடாது" என அப்பா சொல்லிக்கொடுத்தது சிறுவன் கர்வித்துக்கு ஞாபகம் வந்துள்ளது.


கர்வித் டியூசனுக்கு வந்துசேரவில்லை என அவரது டியூசன் ஆசிரியர் அம்மாவுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். மகன் டியூசன் செல்லாமல் எங்கே போயிருப்பான் என குடும்பமே தேடத் தொடங்கியுள்ளது.

அப்பார்ட்மெண்ட் பாதுகாவலர் 5 மணி முதல் லிஃப்ட் வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளார். உடனே லிஃப்ட் சரிசெய்ய தொழிலாளர்களை அழைத்துள்ளனர்.

2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?
Travel: டெல்லி முதல் துருக்கி வரை - உலகின் பிரபலமான சந்தைகள் என்னென்ன?

இரண்டு மணிநேரம் கழித்து 7 மணி அளவில் லிஃப்டை ஓபன் செய்த போது சிறுவன் கர்வித் உள்ளே வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

இதனைப் பார்த்த அப்பார்ட்மெண்ட்வாசிகள் அசந்து போய்விட்டனர். பதட்டமடையாமல் இருக்க கவனத்தை திசை திருப்புவதற்காக புத்தகத்தை எடுத்ததாக கர்வித் கூறியுள்ளார்.

2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?
வியட்நாமில் மாரியம்மன் கோவில் இருக்கா? வியக்க வைக்கும் வரலாறு!


சிறுவனுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் மீது புகார் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் கர்வித்தின் அம்மா. மேலும் அப்பார்ட்மெண்டில் லிஃப்ட் கோளாறு ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

முடிந்த அளவு லிஃப்ட்களில் குழந்தைகளை தனியாக பயணிக்க வைக்காமல் இருப்பது நல்லது. மேலும் சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டமடையாமல் சிந்தித்து செயல்படவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

2 மணி நேரம் லிஃப்டில் தனியாக சிக்கிய 8 வயது சிறுவன் - அனைவரும் வியக்கும்படி என்ன செய்தார்?
7 வருடங்களாக தப்பிய திருடன் - நொடியில் மாட்டிக்கொண்ட வேடிக்கை - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com