Zomato: ஒரு மணி நேரம் தாமதமான டெலிவரி; ஆரத்தி எடுத்து வரவேற்ற வாடிக்கையாளர் | viral video

ஒரு வழியாக உணவு வீட்டிற்கு வர, வாடிக்கையாளர் கையில் ஆரத்தி தட்டுடன் டெலிவரி ஏஜன்ட்டை வரவேற்றார். "வாருங்கள்...உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்" என்று கூறி, அவருக்கு ஆரத்தி எடுத்து, பொட்டும் வைத்து விடுகிறார்
Zomato
Zomato Twitter
Published on

தாமதமாக வந்த சொமேட்டோ ஊழியரை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதில் நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்னை, டெலிவரியில் தாமதம். மழை, போக்குவரத்து நெரிசல், தூரம், அல்லது பண்டிகை காலங்கள் அதற்கு முக்கிய காரணங்கள். சிலர் இதனை மிகவும் கடுமையான முறையில் கையாளுவார்கள், சிலரோ, நகைச்சுவையாக கையாளுவார்கள்.

Zomato
சோமேட்டோ ஊழியருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர் - இணையவாசிகளை நெகிழ வைத்த சம்பவம் |Video
Zomato
ZomatoTwitter

இப்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ, இந்த இரண்டாம் வகையை சார்ந்தது தான். டெல்லியை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற வாடிக்கையாளர் பிரபல சோமேட்டோ தளத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஆர்டர் செய்து ஒரு மணி நேரம் ஆகியும் உணவு அவருக்கு டெலிவர் செய்யப்படவில்லை.

ஒரு வழியாக உணவு வீட்டிற்கு வர, வாடிக்கையாளர் கையில் ஆரத்தி தட்டுடன் டெலிவரி ஏஜன்ட்டை வரவேற்றார். "வாருங்கள்...உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்" என்று கூறி, அவருக்கு ஆரத்தி எடுத்து, பொட்டும் வைத்து விடுகிறார்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் அந்த டெலிவரி ஏஜன்ட்டும் கேஷுவலாக எடுத்துகொண்டு, தருணத்தை நகைச்சுவையாக மாற்றினர்.

மேலும், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பகிர்ந்தவர், "டெல்லியின் போக்குவரத்து நெரிசலிலும், உணவை டெலிவர் செய்துள்ளீர்கள்...நன்றி சோமேட்டோ" என்று தலைப்பிட்டிருந்தார். 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகள், 2 மில்லியன் வியுக்களை பெற்றுள்ளது இந்த வீடியோ

Zomato
சோமேட்டோ ஊழியராக பள்ளி சிறுவன்: இணையத்தில் சர்ச்சை - நிறுவனத்தின் விளக்கம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com