சோமேட்டோ ஊழியராக பள்ளி சிறுவன்: இணையத்தில் சர்ச்சை - நிறுவனத்தின் விளக்கம் என்ன?

பள்ளி மாணவர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அதற்காக அந்த சிறுவன் கூறும் காரணம் இணையவாசிகளை எமோஷனலாக வைத்திருக்கிறது.
Zomato
Zomato Twitter
Published on

பள்ளி மாணவர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அதற்காக அந்த சிறுவன் கூறும் காரணம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவுகளை நேரடியாக வழங்கி வருகிறன.

zomato agent
zomato agentTwitter

பள்ளி மாணவர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அதற்காக அந்த சிறுவன் கூறும் காரணம் இணையவாசிகளை எமோஷனலாக வைத்திருக்கிறது.

ராகுல் மிட்டல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Zomato
வீல்சேரில் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி சோமேட்டோ ஊழியர் - யார் அவர்?

அதில் பள்ளி சிறுவனின் தந்தை ஒரு விபத்தில் சிக்கிக் காயமடைந்த காரணத்தினால், காலையில் பள்ளிக்குச் சென்றும், மாலை 6 மணியிலிருந்து சோமேட்டோவில் உணவு டெலிவரி ஏஜென்டாகவும் வேலை பார்ப்பதாகத் தலைப்பிட்டிருந்தது.

ராகுல் மிட்டல், இந்த சிறுவனின் உத்வேகத்தைப் பாராட்டி, அவனது தந்தை விரைவில் குணமடைய உதவ வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.

Zomato
சோமேட்டோ ஊழியருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர் - இணையவாசிகளை நெகிழ வைத்த சம்பவம் |Video
Zomato
ZomatoTwitter

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் அதே நபர் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் குழந்தைத் தொழிலாளர் குறித்து விமர்சித்தவர்களுக்கான விளக்கம் என தெரிவித்து, சிறுவன் பயன்படுத்திய அவரது தந்தையின் ஐடியை சோமேட்டோ தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும், அந்த ஊழியரின் குடும்பத்திற்கு தேவையான பண உதவியை சொமோட்டோ செய்ததாகவும் பதிவிட்டுள்ளார். அவரது தந்தை உடல்நிலை சீராகி மீண்டும் வேலைக்குத் திரும்பும் போது ஐடி விடுவிக்கப்படும் என்றும் சோமேட்டோ தெரிவித்ததாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Zomato
குதிரையில் உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர் - கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5000 சன்மானம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com