பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடுகிறார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மோடி பிறந்தநாளை முன்னிட்டு 56 இன்ச் ”மோடி ஜி” தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 56 உணவு வகைகள் ஓரே தட்டில் வழங்கப்படும், அவற்றை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா கூறுகையில்,
பிரதமர் மோடி மீது அதிக மரியாதை உண்டு, அவருடைய பிறந்தநாளில் எதாவது ஒன்று செய்ய விரும்பி இது போன்ற அறிவிப்பை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்காக இந்த பிரமாண்ட தாலியை தயார் செய்து அதற்கு 56 இன்ச் மோடி ஜி தாலி என்று பெயரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தங்களது உணவகம் வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அது நடக்காத காரியம் எனவே அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இதனை செய்ய விரும்பியதாக சுமித் கல்ரா தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust