மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?

5ம் வகுப்புக்கு மேல் படிக்காத இவர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக திகழ்ந்தார். 2017ம் ஆண்டு இவருக்கு சம்பளமாக மட்டும் 21 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.
மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?
மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?Twitter
Published on

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சாதாரண வியாபாரியாக வந்து இப்போது கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் தரம்பால் குலாத்தியின் கதை தான் இது.

இவரது எம்.டி.ஹெச் நிறுவனம் லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களின் அங்கமாக மாறியுள்ளது.

'மகாஷாய்' என்று அழைக்கப்படும் தரம்பால் குலாத்தில் 2020ம் ஆண்டு தனது 98 வயதில் மரணமடைந்தார்.

இந்த ஆண்டு அவருக்கு நூற்றாண்டாக இருந்திருக்கும். அப்படி நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

'மசாலா ராஜா' என்ற பட்டம் தான் அவர் சாதித்து பெற்றது.

1923ம் ஆண்டு இப்போது பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் பகுதியில் தான் தரம்பால் பிறந்தார். அவரது தந்தை சுன்னிலால் (Chunni Lal) ஒரு மசாலா வியாபாரி.

தனது தந்தைக்கு சிறு வயதிலேயே உதவிகள் செய்யத் தொடங்கிய தரம்பால் மசாலா வியாபாரத்தையும் கற்றுக்கொண்டார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்த மொத்த சொத்துக்களையும் விட்டுவிட்டு 1,500 ரூபாயுடன் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார் தரம்பால்.

அதில் 650 ரூபாய்க்கு ஒரு வண்டியை வாங்கி தனது மசாலாக்களை விற்கத்தொடங்கியுள்ளார்.

மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து டெல்லியில் ஒரு கடையை அமைத்துள்ளார்.

அந்த கடைக்கு Mahashian Di Hatti of Sialkot எனப் பெயர் வைத்துள்ளார்.

தொடர்ந்து கடினமாக உழைத்து தனது வர்த்தகத்தை இந்தியாவன் பல பகுதிகளுக்கும், சில வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தினார்.

மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?
கீரவாணி: ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரது கதை என்ன? 

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக திகழ்ந்தார். 2017ம் ஆண்டு இவருக்கு சம்பளமாக மட்டும் 21 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவரது தலைமையில் எம்.டி.ஹெச் மசாலா கம்பனி 1000 கோடி மதிப்புடைய நிறுவனமாக திகழ்ந்தது. இவர் இறக்கும் போது இவரது சொத்து மதிப்பு 5,000 கோடியாம்.

5ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கொடுத்து வைக்காத இவர் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் உழைத்திருக்கிறார். 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்தியுள்ளார்.

மகாஷாய் : பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் கோடீஸ்வரர் ஆன மசாலா ராஜா- யார் இவர்?
ரவீந்தர் கௌசிக் : பாகிஸ்தான் இராணுவத்தில் மேஜரான இந்திய RAW ஏஜெண்ட் - சுவாரஸ்ய கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com