குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?

கல்லறைகள் இருக்கும் இடங்களை சுற்றி கம்பிகளை கொண்டு தடுப்புகள் போடப்பட்டது. எஞ்சியிருக்கும் இடத்தில் தளம் அமைத்து, ஒரு தேநீர் விடுதியின் அமைப்பு கட்டமைக்கப்பட்டது. இந்த கடைக்கு வாடிக்கையாளர்களும் வரத் தொடங்கினர். டீ கடை உணவகமானது.
குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?
குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?ட்விட்டர்

தற்போதெல்லாம் ரெஸ்டாரண்ட்களும் கஃபேக்களும் பல தீம்களில் வடிவமைக்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், ஈர்க்கவும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் இவ்வாறு வித்தியாசமான ஐடியாக்களை பின்பற்றுகின்றனர்.

பேய்கள் இருப்பது போல ஹாண்ட்டட் தீம், செல்லப்பிராணிகளுடன் விளையாடிக்கொண்டே சாப்பிடும் வகையில் ரெஸ்டாரண்ட்கள் வந்துவிட்டன.

அந்த பட்டியலில் தான் வருகிறது இந்த கல்லறை டீ ஷாப்.

கல்லறை டீ ஷாப் ஆ என்று ஆச்சரியப்படுவது தெரிகிறது. இங்கு அமர்ந்து தேநீர் அருந்துபவர்கள், சாப்பிடுபவர்கள் நிஜமாகவே பிணங்களுக்கு மத்தியில் தான் சாப்பிடுகின்றனர்.

இந்த இடத்தின் பெயர் லக்கி ரெஸ்டாரண்ட். குஜராத்தின் அஹமாதாபாத் மாநகருக்கு உட்பட்ட லால் தர்வாஜாவில் இருக்கும் இது சுடுகாட்டுக்கு மத்தியில் தான் அமைந்திருக்கிறது.

கிருஷ்ணன் குட்டி என்பவர் தான் இந்த உணவகத்தின் உரிமையாளர். இந்த இடத்தை விலைக்கு வாங்கும்போது கல்லறைகள் இருப்பது தெரியாமல் வாங்கிவிட்டாராம்.

குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?
கல்லறைகள் மட்டும் இருக்கும் கிராமம்; மர்மத்தால் மறைந்திருக்கும் மலைப்பகுதி - பின்னணி என்ன?

இருந்தாலும், உணவகமோ அல்லது தேநீர் கடையோ அமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கிருஷ்ணன் குட்டி.

இவர் தான் வாங்கிய இடத்தை மாற்றியமைத்தார். கல்லறைகள் இருக்கும் இடங்களை சுற்றி கம்பிகளை கொண்டு தடுப்புகள் போடப்பட்டது. எஞ்சியிருக்கும் இடத்தில் தளம் அமைத்து, ஒரு தேநீர் விடுதியின் அமைப்பு கட்டமைக்கப்பட்டது.

இந்த கடைக்கு வாடிக்கையாளர்களும் வரத் தொடங்கினர். டீ கடை உணவகமானது.

வருபவர்களை கவரும் வண்ணம் “உயிருடன் இருப்பவர்களை மதிப்பது போலவே, இறந்தவர்களையும் மதிப்போம்” என்ற வாசகத்தை வைத்துள்ளார் கிருஷ்ணன் குட்டி.

முதலில் கல்லறைகளுக்கு மத்தியில் இருப்பதால் மக்களை ஈர்த்த இந்த இடம், போகப் போக ஒரு சாதாரண உணவகமாக மக்கள் மனதில் நிற்க தொடங்கியது. இங்கு வருபவர்களுக்கு சவங்கள் புதைக்கப்பட்டு இருப்பது ஒரு பொருட்டாக இல்லை என்கிறார் கிருஷ்ணன் குட்டி.

குஜராத்: கல்லறையா? டீ கடையா? சுடுகாட்டை உணவகமாக மாற்றிய நபர்! திகிலான அனுபவத்துக்கு தயாரா?
சீனா: அந்தரத்தில் தொங்கும் பெட்டிக்கடை - திக் திக் ஷாப்பிங் செய்ய ரெடியா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com