ஜெர்மனி: மோடி முன் பாடிய சிறுவன்… ட்விட்டரில் கொதித்த தந்தை - நடந்தது என்ன?

“அவன் எனது 7 வயது சிறுவன். தனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காக ஒரு பாடலைப் பாடினான். உங்களது மலிவான அரசியலையும், நகைச்சுவைகளையும் அவனிடமிருந்து விலக்கி வையுங்கள்” - சிறுவனின் தந்தை
குனால் கம்ரா
குனால் கம்ராTwitter

பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளில் ஜெர்மனியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரைக் காண ஜெர்மனி வாழ் இந்தியர்களும் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவன் ஒருவன் பிரதமர் மோடி முன்பாக ஒரு பாடலை பாடிக்காட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

சிறுவனின் வைரல் வீடியோவை ஸ்டாண்ட் அப் கமீடியன் குனால் கம்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனால் அதில் சிறுவனின் குரலுக்கு 'பீப்லி லைவ்' எனும் இந்தி படத்தில் வரும் பாடலை எடிட் செய்து நாட்டில் நிலவும் பண வீக்கத்தைக் கிண்டல் செய்வது போலப் பதிவிட்டார். இந்த பதிவு வட இந்தியாவில் வைரலானது. அத்துடன் சிறுவனின் வீடியோ பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சையுமானது.

குனால் கம்ராவின் செயலால் எரிச்சலடைந்த சிறுவனின் தந்தை கணேஷ் ட்விட்டரில் அவரை டேக் செய்து, “அவன் எனது 7 வயது சிறுவன். தனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காக ஒரு பாடலைப் பாடினான். அவன் சிறுவனாக இருந்தாலும் உங்களை விட அவனது நாட்டை அதிகமாக நேசிக்கிறான். உங்களது மலிவான அரசியலையும், நகைச்சுவைகளையும் அவனிடமிருந்து விலக்கி வையுங்கள்” எனப் பதிவிட்டார்.

குனால் கம்ரா
'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

இந்த பதிவைத் தொடர்ந்து குனால் கம்ராவுக்கு எதிராகப் பல ட்விட்டர் பயனர்கள் கருத்துக்களைப் பதிவிடத் தொடங்கினர். குனாலை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

குனால் கம்ரா
Rahul Gandhi: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நைட் க்ளப் வீடியோ வைரல் - பின்னணி என்ன?

சிறுவனின் தந்தைக்குப் பதிலளித்த குனால், “ இது உங்களது மகன் குறித்த நகைச்சுவை அல்ல, உங்கள் மகன் அன்புக்குரிய தாய் நாட்டுக்காகப் பாடும் பாடலை நீங்கள் ரசிக்கும் வேளையில் அந்த நாட்டின் மக்கள், பிரதமர் கேட்க வேண்டும் என நினைக்கும் பாடல்” என விளக்கமளித்தார். எனினும் அவருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தன.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரத்தில் தலையிட்டு மும்பையில் உள்ள ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது அதில் இந்த வீடியோ நீக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த பிரச்சனை முற்றுவதற்கு முன்னரே குனால் கம்ரா தனது பதிவை நீக்கிவிட்டார். எனினும் நெட்டிசன்கள் தொடர்ந்து குனால் கம்ராவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

குனால் கம்ரா
உத்தர பிரதேசம் : பாலியல் புகார் அளிக்க வந்த 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த காவல் அதிகாரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com