குழந்தை பிறந்ததை பார்ட்டி வைத்து கொண்டாடிய சிறைவாசிகள் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

மாயா தேவி என்ற அந்த பெண், சிறைக்கு கூட்டிவரப்பட்ட போதே கர்ப்பமாக இருந்ததாக சிறைக் காவலர் குந்தன் குமார் கூறினார். இதனால், சிறையில் மாயவை கவனித்துகொள்ள தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
cradle
cradlecanva
Published on

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அதனை திருவிழா போல கொண்டாடுவோம். இங்கும், சில பெண்கள் தங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஒரு பெண், சிறையில் தன் தண்டனைக் காலத்தின்போது காவலர்களின் அலட்சியத்தால் தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது எனக் கூறி இழப்பீடு பெற்றிருந்தார்.

இங்கு உத்திர பிரதேசத்தில், அதற்கு மாறாக, பெண்கள் சிறையில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடியுள்ளனர் சக கைதிகள். மாயா தேவி என்ற அந்த பெண், சிறைக்கு கூட்டிவரப்பட்ட போதே கர்ப்பம் தரித்திருந்தார் என சிறைக் காவலர் குந்தன் குமார் கூறினார். இதனால், சிறையில் மாயவை கவனித்துகொள்ள தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

cradle
61 வயது மூதாட்டியை மணந்த 24 வயது இளைஞர் - குழந்தை பெற 1 கோடி செலவு செய்த ஜோடி

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி, மாயா சிறை மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆறு நாட்கள் கழித்து, மாயாவுடன் வசிக்கும் சக பெண் கைதிகள், குழந்தை பிறந்துள்ளதை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், சிறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டது தான். மாயாவும் அவரது குழந்தையும், வீட்டில் இருப்பது போலவே உணரவேண்டும் என்பதால் இதை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன், மாயாவின் அறையை மலர்கள், மாலைகள் கொண்டு அலங்கரித்து, குழந்தைக்குப் பொம்மைகள், உடுத்த புதிய ஆடைகள், குழந்தை படுத்து உறங்கத் தொட்டில், மற்றும் மாயாவுக்கும் ஒரு புதிய புடவை ஆகியவற்றைப் பரிசளித்துள்ளனர்.

இதனால், நெகிழ்ச்சியடைந்த மாயா, தான் கருவுற்றிருந்தபோது, சிறைக்கு செல்வதில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் அங்கிருந்தவர்களின் ஆதரவு தன் பயத்தை போக்கியதாகவும் மனம் திறந்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதில், பலரும் சிறை அதிகாரிகளையும், மற்ற கைதிகளையும் பாராட்டி வருகின்றனர்.

cradle
ஸ்டார் பக்ஸில் காபி குடித்த காவலர்கள், பெண் கைதிக்கு ரூ.3.83 கோடி இழப்பீடு- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com