ஒரே ஒரு குறுஞ்செய்தியில் 1 கோடி மோசடி : சர்ச்சையில் சிக்கிய தடுப்பூசி நிறுவனம்
அடர் பூனாவாலா போல பேசி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்
சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியாவிற்கு, அடர் பூனாவாலா எனக் கூறி, குறுஞ்செய்திகள் அனுப்பி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்து ஒரு கும்பல் திருடியுள்ளதாக பூனே காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த புதன் கிழமை வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் குறித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் மோசடி செய்த கும்பல் யாரென்று கண்டறியப்படவில்லை
கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, சதீஷ் தேஷ்பாண்டே என்பவருக்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், பேசுவது SIIன் தலைவர் அடர் பூனாவாலா என்று மறுபக்க இருப்பவர் கூறியுள்ளார். சதீஷ் தேஷ்பாண்டே நிறுவன இயக்குநர்களில் ஒருவர்.
ஒரு சில வங்கி கணக்குகளை பகிர்ந்து, அவற்றிற்கு உடனடியாக பணம் அனுப்புமாறும் அவர் கூறியுள்ளார். பணப் பரிமாற்றமும் நடந்துள்ளது.
பேசுபவர் சீரம் நிறுவனத்தின் சிஇஓ தான் என நம்பி, ரூ. 1,01,01,554 அவர்கள் கொடுத்த வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பிறகு விசாரித்தப் போது தான், அடர் பூனாவாலா அப்படி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பவே இல்லை என தெரியவந்துள்ளது.
நிறுவனத்தின் பொருளாதார மேலாளர் துரிதாமாக செயல்பட்டு காவல் துறையில் புகார் அளித்தார். அடையாளம் தெரியாத நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மூத்த இன்ஸ்பெக்டர் பிரதாப் மங்கர் கூறினார். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust