ஒரு ட்ராவல் போகப் பல காரணங்கள் இருக்கலாம். ஹனிமூனுக்காக, நண்பர்களுடன் கொண்டாட, சாகசத்துக்காக, புதியவற்றைத் தெரிந்து கொள்ள, ஆன்மிக ரீதியிலாக, மன அமைதிக்காக… எல்லா விதப் பயணங்களுக்கும் ஏற்ற ஒரு இடம் இருக்கிறது என்றால் அது இமாச்சல் பிரதேசம் தான்.
மிக அழகான மலைகளைக் கொண்டுள்ள இந்த இமாச்சல் இமயமலைத் தொடரின் மேற்கு பக்கத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு பனிப் போர்த்தியிருக்கும் வானளாவிய மலைகள், ஊர்ந்து செல்லும் ஆறுகள், அழகான புல்வெளிகள், வித்தியாசமான கிராமங்கள், கலாச்சாரங்கள் ஆகியவை இருக்கின்றன. ஒரு மாயாஜால மலைப் பிரதேசம் எனக் கூறும் அளவு மயக்கும் அழகுடைய இமாச்சல் பிரதேசத்திலிருக்கும் சில முக்கியமான மலைகளைக் குறித்துக் காணலாம்.
ஸ்பிட்டி மிக அழகான மலைத் நகரம். இங்குள்ள கிராமங்களில் சுற்றித்திரிவதே அலாதியான உணர்வைத் தரும். அதே வேளையில் மலையேறும் சாகச விரும்பிகளுக்கு அளவெடுத்துச் செய்தது போலிருக்கும் மலை ஸ்பிட்டி. குளிரை அனுபவிக்கவும் வாழ்தலை உணரவும் விரும்புபவர்களுக்கு ஸ்பிட்டி சொர்கம்!
இமாச்சலின் கோவில் நகரம் எனப்படும் இடம் ஷோகி. இங்குள்ள சிவாலயங்கள் அதிக அளவில் ஆன்மிக பயணிகளை ஈர்த்தாலும் குடும்ப சுற்றுலாவுக்கு மிகச் சிறப்பான இடமாகக் கருதப்படுகிறது ஷோகி. இங்குள்ள பச்சை உடுத்திய நகர அமைப்பே வியப்பை ஏற்படுத்தும். கன்டகட் மலை நகரம், ஜாகொ மலை மற்றும் அனுமன் கோவில் ஆகிய சுற்றுலாத்தலங்கள் வருவோரை வசியம் செய்யும் அழகுடன் இருக்கும்.சிம்லா
சிம்லா இமாச்சல் பிரதேசத்தின் தலை நகரம் என்றாலும் இதுவும் மலை நகரம் தான். பழமை மாறாத இடங்களையும் கலாச்சாரங்களையும் இங்கும் காண முடியும். பனிக்காலத்தில் இதன் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
மணாலி செல்வது பலரின் கனவு என்றே கூறலாம். உண்மையாகவே மணாலியில் இருப்பதும் கனவிலிருக்கிறோமா என சந்தேகப்பட வைக்குமளவு வியப்பானதாக இருக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க மணாலி ஆச்சரியமூட்டும் பள்ளத்தாக்குகள், பைன் காடுகளுடன் ரம்மியமாக இருக்கும். ஹனிமூனுக்கு சொர்கம் வரை போய் வர விரும்புபவர்கள் தாரலமாக செல்லலாம்.
சிம்லாவுக்கு மில அருகிலிருக்கும் குஃப்ரி காதல் பொங்கி வரும் இடமாக இருக்கிறது. இங்கிருக்கும் பனிபடர்ந்த மலைகள் கோடையின் வெப்பத்தை மறக்கச் செய்யும், இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் குஃப்ரி.
விசித்திரங்களின் நிலம் என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது கின்னார். இங்கிருக்கும் மரகதப் பச்சைப் பள்ளத்தாக்குகள் தான் இந்தப் பெயருக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஆப்பிள் தோட்டங்கள் பனிமலைகள் இந்த ஊரின் அழகைக் கூட்டுகின்றன. ஆன்மிக சுற்றுலாவுக்கும் கின்னார் பெயர்பெற்றது.
இயற்கை அழகு, பழங்கால காலனித்துவ கட்டிடக்கலை, அழகான கூழாங்கல் சாலைகள் மற்றும் கோதிக் பாணி தேவாலயங்கள் ஆகியவற்றால் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாக கசௌலி விளங்குகிறது. சாகச விரும்பிகளுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், உணவு மற்றும் பாரம்பரியத்தைத் தேடுபவர்களுக்கும் கசௌலி ஏற்ற இடம். இங்குள்ள மால் ரோடு புகழ்பெற்றது. பர்ச்சஸிங்கிற்கு ஏற்ற இடம்.
தர்மசாலா இயற்கை அழகு நிறைந்த பகுதி. இங்கிருக்கும் புத்த மடாலயங்கள் மனதுக்கு அமைதி தரக்கூடியவை. அழகிய நீர்வீழ்ச்சிகளில் குளிரில் ஒரு குளியல் போட்டு, மலை உச்சியில் அமைந்துள்ள சிறிய கஃபேக்களில் உணவருந்தி வாழ்ந்தால் தன் உண்மையான தர்மசாலாவை உணர முடியும்.
மன அமைதியைத் தேடி பயணத்துக்குக் கிளம்புபவர்களைச் சாந்தமாக வரவேற்கும் இடம் சாம்பா. இங்குள்ள ஆன்மிகத் தலங்கள் நேர்மறை அதிர்வுகளை உள்ளத்தில் ஊறச் செய்பவை. மிகப் பழமையான 4ம் நூற்றாண்டு கோவில்கள் இங்குக் காணப்படுகின்றன. அதிகம் மனிதர்கள் வந்து செல்லாத தலங்கள் இங்கு இருக்கின்றன. கொஞ்சம் பயமுறுத்தும் சிவாலயங்களைக் காணலாம். இங்குள்ள லக்ஷ்மி நாராயண கோவில் பிரசித்தி பெற்றது.
கடல் மட்டத்திலிருந்து 1525 அடி உயரத்தில் இமாச்சலின் மொத்த அழகையும் கொட்டி வைத்திருக்கும் இடம் பிர். இங்கிருக்கும் திபெத்தியக் காலணிகள் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும். சாகச விரும்பிகளுக்கும் இது ஏற்ற இடம். பாராகிளைடிங் (Paragliding) கூட செய்யலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust