கௌதம் அதானி : உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 15 வது இடம் - தொடரும் பங்குகளின் விலை சரிவு

இப்படியே அதானி குழுமத்தின் பங்கு விலைகள் சரிந்தால், கௌதம் அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலின் டாப் 25 இடங்களில் இருந்தும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்றும் சந்தையில் கூறப்படுகிறது.
Gautam Adani slips to 15th in global rich list
Gautam Adani slips to 15th in global rich listTwitter
Published on

சில வாரங்களுக்கு முன்பு வரை உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில் 15 வது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். தற்போது அவருடைய சொத்து மதிப்பு 75.1 பில்லியன் டாலராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் வலைதளம் சொல்கிறது.

அதானி குழுமம் பல்வேறு கணக்கு வழக்கு முறைகேடுகளைச் செய்திருப்பதாகவும், பங்குச்சந்தையில் தங்கள் நிறுவன பங்குகளின் விலையைச் செயற்கையாக அதிகரிக்க செய்வதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வைத்தது. அது குறித்த நீண்ட விரிவான கட்டுரையை கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவன பங்குகளின் விலையும் சரிந்து வருகின்றன.

பங்கு விலை சரிவு ஒரு பார்வை:

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஜனவரி 2ஆம் தேதி 3,841 ரூபாய்க்கு வர்த்தகமானது, இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) 2,179 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 43.25% பங்கு விலை சரிந்து இருக்கிறது.

அதானி பவர் நிறுவன பங்கின் விலை ஜனவரி 2ஆம் தேதி 298 ரூபாய்க்கு வர்த்தகமானது இன்று 212 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சுமார் 28.6 சதவீதம் பங்குவிலை சரிந்து இருக்கிறது.

அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2ஆம் தேதி 2,549 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது இன்று 1,759 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்துக்குள் சுமார் 30 சதவீதம் பங்கு விலை சரிந்து இருக்கிறது.

Adani

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி 2ஆம் தேதி 1,888 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது இன்று 1,160 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 38.5% பங்கு விலை கரைந்து போயிருக்கிறது.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஜனவரி 2ஆம் தேதி திங்கட்கிழமை 3,550 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது இன்று சுமார் 46.5% சரிந்து 1,897 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஜனவரி 2ஆம் தேதி அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 603 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது இன்று சுமார் 26.6% சரிந்து 443 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

அதானியின் அடையாளமாக கருதப்படும் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஜனவரி 2ஆம் தேதி 822 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது இன்று சுமார் 38.7 சதவீதம் சரிந்து 504 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால்…

ஏறத்தாழ ஏழு அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகளும் குறைந்த மற்றும் 26 சதவீதம் சரிந்து இருக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் சுமார் 45 சதவீதம் வரையும் பங்குகளின் விலை சரிந்து இருக்கின்றன.

கௌதம் அதானியின் பெரும்பாலான சொத்துக்கள், அதானி குழும நிறுவனத்தின் பங்குகளாக இருப்பதால், அந்நிறுவன பங்குகளின் விலை சரிவது உடனடியாக கௌதம் அதானியின் சொத்திலும் மிகக் கடுமையாக எதிரொலிக்கிறது.

எனவேதான் சில வாரங்களுக்கு முன்பு வரை உலகின் டாப் மூன்றாவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி, தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கிறார்.

Gautam Adani slips to 15th in global rich list
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?

கடந்த பல மாத காலமாக ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவன பட்டியலில் தொடர்ந்து ஒன்பதாவது இடத்திலேயே நிலைத்து இருக்கிறார். இன்றைய தேதிக்கு உலகின் டாப் 10 பணக்காரர்களில் இடம் பிடித்திருக்கும் ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி மட்டுமே.

இப்படியே அதானி குழுமத்தின் பங்கு விலைகள் சரிந்தால், கௌதம் அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலின் டாப் 25 இடங்களில் இருந்தும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்றும் சந்தையில் கூறப்படுகிறது. பங்குச்சந்தையில் சில பல ஆயிரங்களை மட்டும் முதலீடு செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி.

Gautam Adani slips to 15th in global rich list
அதானி : சந்தை மதிப்பில் டாடாவை வீழ்த்தி சாதனை - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com