Bard AI: ஒற்றை பதில் $100 பில்லியனை இழந்த Google - என்ன நடந்தது?

இந்த தொழில்நுட்பத்தை வெளியிடுவதற்கு முன், உண்மையான தகவல்களை சரியாக சொல்கிறதா என ஏன் சரி பார்க்கவில்லை என பலரும் கூகுள் நிறுவனத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்பினர்.
Google shares drop $100 billion after its new AI chatbot
Google shares drop $100 billion after its new AI chatbotTwitter
Published on

ஒரு காலத்தில் இணையம் எப்படி ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோ, அப்படி தற்போது செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் வலைதளங்கள் பல்வேறு தளங்களிலும் பல புரட்சிகர மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

அந்த மாற்றத்தோடு இணைந்து தாங்களும் வளர பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றன.

அதில் உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகுள் நிறுவனமும் அடக்கம். ஆனால் ஒரே ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் இதுவரை செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கூகுள் முன்வைக்கும் அனைத்து வாதங்களும் விடைகளும் தவறாகவே போய்க் கொண்டிருக்கின்றன.

கூகுள் நிறுவனம் தயாரித்த புதிய ஏ ஐ தொழில்நுட்பம் ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்ததால், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் பங்குகளின் விலை, புதன்கிழமை சுமார் 7% சரிந்திருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது.

கூகுள் நிறுவனம் பார்ட் (Bard) என்கிற ஏ ஐ பாட்டை இந்த வார திங்கட்கிழமை வெளியிட்டது. அத்தளத்தில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எதையெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறது என, 9 வயது குழந்தையிடம் என்ன கூறலாமென்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி தான், பூமி இருக்கும் சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே இருக்கும் கோளைப் படம் பிடித்த முதல் தொலைநோக்கி என விடை அளித்தது. உண்மையில் இது தவறான தகவல். பார்ட் ஏ ஐ தொழில்நுட்பம் செய்த தவறை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் ட்விட்டரில் உடனடியாக கண்டுகொண்டனர்.

Google shares drop $100 billion after its new AI chatbot
Chat GPT என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஓர் எளிய விளக்கம்!

கடந்த 2004 ஆம் ஆண்டே, யுரோப்பியன் வெறி லார்ஜ் டெலஸ்கோப் என்கிற தொலைநோக்கி, சூரிய குடும்பத்தைச் சேராத கோளைப் படம் பிடித்து விட்டது.

இந்த தொழில்நுட்பத்தை வெளியிடுவதற்கு முன், உண்மையான தகவல்களை சரியாக சொல்கிறதா என ஏன் சரி பார்க்கவில்லை என பலரும் கூகுள் நிறுவனத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்பினர். தொழில்நுட்பத் துறையை உன்னிப்பாக கவனிக்கும் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் கூகுளின் இந்த சொதப்பலை ட்ரோல் செய்கின்றனர் அல்லது கூகுளின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியோடு ஓபன் ஏ ஐ, சேட் ஜிபிடி என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தி சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Google shares drop $100 billion after its new AI chatbot
கூகுள் : 12,000 பேர் பணிநீக்கம் - வேலை இழந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறார் சுந்தர் பிச்சை?

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வணிகப் பள்ளி நடத்தும் தேர்வுகளை எல்லாம் எதிர்கொண்டு தேறி வருகின்றனர். அவ்வளவு ஏன் மக்களை ஈர்க்கும் வகையில் பாடல் வரிகளை எல்லாம் இதை வைத்து எழுதியுள்ளனர்.

இப்படி தன்னோடு போட்டி போடும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவு பிரிவில் சிறப்பாகச் செயல்படுவதை பார்த்து, கடந்த ஆண்டு முதல் கூகுள் பெரும் அழுத்தத்திற்குள் இயங்கி வருகிறது.

இப்போது பார்ட் ஏ ஐ தொழில்நுட்ப தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளை சரி செய்ய மிகக் கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பல்வேறு ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார். விரைவில் பார்ட் ஏ ஐ தொழில்நுட்ப தளம் மிகச் சிறப்பாக செயல்படுவதை கூகுள் நிறுவனம் உறுதி செய்யும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதே கூகுள் நிறுவனம்தான் கடந்த மாதம் தன்னுடைய ஊழியர்கள் 12,000 பேரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியதும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஏ ஐ பிரிவில் கூகுள் தாக்குபிடிக்குமா?

Google shares drop $100 billion after its new AI chatbot
கூகுள் முதல் கோலா வரை: புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் பெயர் என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com