மணமகன் விற்பனைக்கு! சந்தையில் மாப்பிள்ளையை வாங்கும் பெண் வீட்டார்- எங்கு தெரியுமா?

உள்ளூரில் உள்ள ஆலமரத்தடியில் 9 நாட்களுக்கு இந்த சந்தை ஏற்பாடு செய்யப்படுமாம். இந்த பாரம்பரியம் 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது
Grooms for sale
Grooms for saleTwitter
Published on

முன்பெல்லாம் திருமணத்திற்கு வரன் தேடுவது கடினமான காரியமாக இருந்தது. புரோக்கர்கள் மூலம் பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை அணுகுவார்.

ஆனால் தற்போது நாம் இருப்பது டிஜிட்டல் உலகம் என்பதால் ஆன்லைனில் அதாவது மேட்ரிமோனி போன்ற இணையதளங்களில் வரன்களைத் தேடி வருகின்றனர்.

ஆனால் இந்த நவீனக் காலத்தில் மாப்பிள்ளைகளை சந்தையில் வாங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் சொன்னால் நம்ப மாட்டீர்கள், 700 ஆண்டுகளாகப் பீகாரில் இவை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

marriage
marriageTwitter

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் மாப்பிள்ளை விற்பனைக்காக ஒரு சந்தை உள்ளது. மணப்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்து மணமகனின் குடும்பப் பின்னணி மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் வரன்களை தேர்வு செய்துகொள்கிறார்கள்.

உள்ளூரில் உள்ள ஆலமரத்தடியில் 9 நாட்களுக்கு இந்த சந்தை ஏற்பாடு செய்யப்படுமாம். இந்த பாரம்பரியம் 700 ஆண்டுகளாக அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது

Grooms for sale
மாதம் ஒரு பீட்சா, பார்ட்டியில் நல்ல ஃபோட்டோ - திருமணம் செய்ய இப்படியெல்லாம் கண்டிஷன்களா?

அந்த சந்தையில் மணமகனைத் தேர்வு செய்யும் முன்பு, அவர்களின் குடும்பங்கள், மாப்பிள்ளையின் படிப்பு தகுதி மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.

மணமகள் மணமகனைத் தேர்ந்தெடுத்தவுடன், இரு குடும்பங்களும் சேர்ந்து திருமண பேச்சு வார்த்தையைத் தொடங்குவார்களாம்.

வரதட்சணை இல்லாத திருமணங்களை நடத்துவது மற்றொரு நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று இந்த திருமணங்களில் வரதட்சணை கொடுத்து வாங்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் உங்கள் மாப்பிள்ளையை சந்தையில் வாங்க விரும்புகிறீர்களா?

Grooms for sale
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com