கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?

மேற்கத்திய படைப்பிரிவுக்கு தளபதியாகும் முதல் IAF பெண் அதிகாரியாக திகழ்கிறார் ஷாலிசா தாமி. இந்த படைப்பிரிவு பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதனால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?
கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?Twitter
Published on

இந்தியன் ஏர் ஃபோர்ஸ் (IAF) மேற்கத்திய பிரிவில் ஒரு முன்னணி போர் பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக குரூப் கேப்டன் ஷாலிசா தாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேற்கத்திய படைப்பிரிவுக்கு தளபதியாகும் முதல் IAF பெண் அதிகாரியாக திகழ்கிறார் ஷாலிசா தாமி. இந்த படைப்பிரிவு பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்பதனால் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சிறுவயது முதலே இவருக்கு இந்திய விமானப் படையில் இணையவேண்டும் என்பது கனவாக இருந்திருக்கிறது.

2003ம் ஆண்டு ஹெலிகாப்டர் விமானியாக நியமிக்கப்பட்ட ஷாலிசா தாமிக்கு 2800 கிலோமீட்டர் ஹெலிகாப்டர் ஒட்டிய அனுபவம் இருக்கிறது.

சேதக், சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை இயக்கியிருக்கிறார்.

சிறந்த பறத்தல் பயிற்றுவிப்பாளராகவும் இருந்திருக்கிறார் ஷாலிசா தாமி. இவர் சேதக் படையின் தளபதியாகவும் இருந்திருக்கிறார். இந்த பதவியையும் நாட்டிலேயே முதல் பெண்ணாக பெற்றார்.

ஹெலிகாப்டர் விமானியாக பல மீட்பு பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார். வெள்ள நிவாரண குழுக்களில் இருந்துள்ளார்.

இவரது கணவர் வினித் ஜோஷியும் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?
FBI : Top 10 குற்றவாளிகளில் இருக்கும் ஒரே பெண் - 'கிரிப்டோ ராணி'-யின் கதை என்ன?

இந்திய இராணுவத்தில் பெண்கள்

இந்திய இராணுவத்தில் பெண்கள் சேர்ப்பது அதிகமாகியிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு பெண் போர் விமானிகள் 3 பேர் சேர்க்கப்பட்டனர்.

108 கார்னல் தர அதிகாரிகளுக்கு தளபதிகளாக விளங்குவதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல பிரிவுகளுக்கு தளபதிகளாகவும், இஞ்சினியர்,ராணுவ வான் பாதுகாப்பு, புலனாய்வுப் படை, ராணுவ சேவைப் படை, ராணுவ ஆர்டனன்ஸ் படை என பல சேவைகளை வழங்குபவர்களாகவும் பெண்கள் திகழ்கின்றனர்.

கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?
கர்ப்பிணி பெண்கள் யோகா செய்யக்கூடாதா? யோகா தொடர்பான 5 பொதுவான கட்டுக்கதைகள் - உண்மை என்ன?

கப்பல் படையில் பெண்களுக்கு இருந்த தடை விலக்கப்பட்டு முன் வரிசைப் படைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆபத்தான வடக்கு மற்றும் கிழக்கு பிரிவு படைகளிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தமாக 10,493 பெண்கள் இராணுவ சேவைகளில் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் மருத்துவ குழுக்களில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ஷாலிசா தாமி : போர் பிரிவின் முதல் பெண் தளபதி - இராணுவத்தில் பெண்களின் பங்கு என்ன?
ரெனே பர்ன்ஸ் : ஒரே ஆண்டில் 55 நாடுகள் சுற்றிய பெண் - அங்கீகரித்த கின்னஸ் சாதனைகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com