Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

மியான்மரில் இருக்கும் நியாவுங் ஓஹாக் என்ற கிராமம் பெரிதும் வெளியுலகால் அறியப்படாத இடம். இந்த கிராமத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்
Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?ட்விட்டர்
Published on

புதிய இடங்களை தேடிச் சென்று இதுவரை பெறாத அனுபவத்தை பெற விரும்புபவர் நீங்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது.

இந்த நாடும் சரி, உலகமும் சரி, மனிதர்களை ஆச்சரியப்படும் அளவுக்கு நிறைய விஷயங்களை மறைத்து வைத்திருக்கும் களஞ்சியம்.

இதனை கண்டுபிடிப்பதும் மனித இனமே!

அப்படி மறைக்கப்பட்ட ஓரிடம் தான் மியான்மரில் இருக்கும் நியாவுங் ஓஹாக் என்ற கிராமம்.

இந்த கிராமத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்

Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
இந்தியாவின் Bachelor கிராமம் இது தான்! 50 ஆண்டுகளாக இங்கு யாருக்கும் திருமணமாகாதது ஏன்?

மியான்மரின் கலாச்சாரம், வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், மற்றும் இயற்கை அழகை பறைச்சாற்றுகிறது இந்த காட்டு கிராமம்.

மியான்மரின் ஷான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது நியாவுங் ஓஹாக். கதைகளில் நாம் கேட்டறிந்த தேவதைகளின் நிலம் போல இருக்குமாம் இந்த கிராமம்.

இன்லே ஏரியின் கரைகளில் அமைந்திருக்கும் இந்த கிராமத்துக்கு சுமார் ஒரு மணி நேரம் படகில் பயணித்து தான் செல்லவேண்டும்.

அமைதியான இந்த கிராமத்தின் வழியே நடந்து செல்லும் போது, வழி நெடுக கைவினை கலைஞர்களையும், விற்பனையாளர்களையும், ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் நாம் காணமுடிகிறது.

தூரத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்த கோவில்களை காணலாம். இந்த கிராம்த்தின் சிறப்பே இங்கு பகோடா பாணியிலும் நவீன கட்டிடக்கலையின் அம்சமாக கோவில்களும் கட்டிடங்களும் ஒரு சேர இருப்பதை காணலாம்.

இந்த பகோடா பாணி கட்டிடங்கள் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது

இந்த கோவில்களை கடந்து சென்றால், சந்தைகளை காணலாம். இங்கு காய்கறிகள், மீன் வகைகளை நாம் வாங்க முடியும்.

இந்த சந்தைகளை கடந்து சென்றால், சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்களை காணலாம்.

இந்த கிராமத்தில் பிரமிக்க வைக்கும் ஸ்தூபிகள் மற்றும் பகோடா கட்டடங்கள் உள்ளன என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தோம்.

இந்த பகோடாக்களும், ஸ்தூபிகளும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

Nyaung Ohak பகோடா, மூங்கில் பகோடா என்றும் அழைக்கப்படுகிறது. பாசியால் மூடப்பட்டு உயரமான மூங்கில் தோப்புகளால் சூழப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

Nyaung Ohak இல் பார்க்க வேண்டிய மற்றொரு தளம் Shwe Inn Dain Pagoda வளாகம். இதில் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்தூபிகள் உள்ளன.

நுணுக்கமான வேலைப்படுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்தூபிகள் ஒரு மர்மமான உணர்ச்சியை அளிக்கிறது.

பல நூற்றாண்டுகளாக Nyaung Ohak இன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் மதம் முக்கிய பங்கு வகித்தது. கிராமத்தில் உள்ள பல மத கட்டமைப்புகள் உள்ளூர் பௌத்த சமூகத்தால் வழிபாடு மற்றும் தியானத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

கதைகளின்படி, முன்னொரு காலத்தில், இன்லே ஏரி வழியாக பயணம் மேற்கொண்ட பயணிகள், வணிகர்களுக்கு இந்த கிராமம் தங்குமிடமாக விளங்கியது.

தற்போது நியுவாங் ஓஹாக் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியுள்ளது.

Nyaung Ohak: மியான்மரில் மறைந்திருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
அசாம் : ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com